இருளில் மூழ்கிய BSNL.. மீண்டும் சேவை துண்டிப்பு.. பயனர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? புகார் மேல் புகார்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனத்திற்கு நேரம் சரி இல்லாதது போல் தெரிகிறது. புதிய வருடம் பிறந்த நேரத்தில் இருந்து பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க் சேவை இந்தியாவில் பல இடங்களில் ஆங்காங்கே நிலைவர செயல்படாமல் மொத்தமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது (BSNL service outage). பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பலர், அவர்கள் வசிக்கும் பல இடங்களில் மொத்தமாகவே பிஎஸ்என்எல் சேவை இல்லாமல் தவித்து வருவதாக புகார் (BSNL blackout) அளித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு BSNL இழப்பீடு வழங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவை, பிஎஸ்என்எல் இன்டர்நெட் சேவை, மற்றும் தொலைபேசி சேவை போன்ற குறிப்பிடத்தக்க சேவை கடந்த இரண்டு நாட்களாக இடையூறுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு வழங்குநரான பிஎஸ்என்எல் நிறுவனம், டயல்-அப் (dial-up) மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் (broadband internet), போன் சேவை (phone service), போன்ற சேவைகளை வழங்குகிறது.

இருளில் மூழ்கிய BSNL.. மீண்டும் சேவை துண்டிப்பு.. இழப்பீடு கிடைக்குமா?
புதிய சேவையாக பிஎஸ்என்எல் நிறுவனமா தற்போது மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் (mobile phone and Internet), மற்றும் இணையம் மூலமான டிவி சேவைகள் (television over internet - IPTV) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இந்த சேவைகளில் மக்கள் இடைநிறுத்தங்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் பயனர்களிடமிருந்து புகார்கள் (BSNL outage report) அதிகரித்து வருகின்றன.
இதனால், BSNL-ன் கவலை அதிகரித்து வருகிறது மற்றும் பிஎஸ்என்எல் இடைநிறுத்தங்களால் (BSNL network crash) ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு (Compensation) வழங்குவது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கோளாறு குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு சேவைகளை பாதித்துள்ளது. பிஎஸ்என்எல் டோட்டல் பிளாக் அவுட் 33% புகாரை பெற்றுள்ளது. அதேபோல், இன்டர்நெட் தொடர்பான பிரச்சனைகள் (30%) மற்றும் தொலைபேசி சேவை இடைநிறுத்தங்கள் (29%) போன்ற பிரச்சனைகள் புகார்களில் பதிவாகியுள்ளன.
BSNL-ன் எந்தெந்த சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது:
கூடுதலாக, ஒரு சிறிய சதவீத பயனர்கள் வைஃபி (4%), மின்னஞ்சல் (3%) மற்றும் தொலைக்காட்சி சேவைகள் தொடர்பான பிரச்சனைகளை புகாரளித்துள்ளனர். இந்த இடைநிறுத்தங்களின் தாக்கம் கொல்கத்தா, புது தில்லி, ராஞ்சி, மும்பை, லக்னோ, ஹாவரா, கான்பூர், பெங்களூரு (Bengaluru), திஸ்பூர், புவனேஸ்வர், குவஹாத்தி, சென்னை (Chennai), கோயம்புத்தூர் (Coimbatore), புனே உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நெட்வொர்க் பிரச்சனைகளின் பரந்த அளவைக் காட்டுகிறது.
நீங்கள் BSNL நெட்வொர்க்கை பயன்படுத்தி, நெட்வொர்க் சிக்கல் (BSNL network issue) அல்லது செயலிழப்பைச் சந்தித்தால், உங்கள் சிக்கலைப் புகாரளித்து உதவி பெற நிறுவனத்தைத் தொடர்புகொள்வது அவசியமானது. உங்கள் பகுதியில் அறியப்பட்ட செயலிழப்புகள் குறித்த அறிவிப்புகளுக்கு அவர்களின் இணையதளத்தையும் நீங்கள் பார்க்கலாம். BSNL இதற்கு முன்பு, சில நேரங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் (credit) மற்றும் பிற இழப்பீடுகளை (compensations) வழங்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
BSNL வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இந்த சிக்கலுக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஆகையால் புகார் அளித்து வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேலை இழப்பீடுகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது இந்த கோளாறை சரி செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க தங்களது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. இருப்பினும், இன்னும் பல வாடிக்கையாளர்கள், பல இடங்களில் இருந்து தொடர்ந்து புகார்களை (BSNL customers reporting network issue) பதிவு செய்துகொண்டே இருக்கின்றனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் தடுமாற்றத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications








