BSNL-ன் புலி பாய்ச்சல்.. 1870 சைட்களில் 5ஜி.. ஜியோவை போல 5G SA சேவை.. இனி கஸ்டமர்களை பிடிக்க முடியாதே!
இந்தியாவிலேயே மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டிருந்தாலும் கூட, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு அனைவர் மத்தியிலும் நற்பெயர் கிடையாது. காரணம் இந்நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி (4G and 5G) சேவைகள் பெரிய அளவில் அறிமுகம் செய்யப்படவில்லை.
ஒருவழியாக "இந்த குறையும் விரைவில் தீரும்!" என்று கூறும்படியாக பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் தொடர்பான 2 தரமான அப்டேட் கிடைத்துள்ளது. முதல் அப்டேட் - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி எஸ்ஏ (5ஜி ஸ்டென்ட் அலோன் - 5G Standalone) நெட்வொர்க்கை டெல்லியில் வெளியிட 3 நிறுவனங்களின் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெளியீடு நாட்டின் தலைநகரில் மொத்தம் 1,876 தளங்களில் நடக்கும்படி திட்டமிடப்பட்டு உள்ளது.பிஎஸ்என்எல்-ன் 5ஜி டெண்டரில் கலந்துகொண்டு, 5ஜி எஸ்ஏ நெட்வொர்க்க்கை வெளியிட ஆர்வம் காட்டியுள்ள நிறுவனங்கள் - தேஜாஸ் நெட்வொர்க்ஸ், லேகா வயர்லெஸ் மற்றும் கலூர் நெட்வொர்க் (Tejas Networks, Lekha Wireless, Galore Network) ஆகியவைகள் ஆகும்.
தேஜாஸ் நெட்வொர்க்குகள் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீட்டின் (BSNL 4G Launch) ஒரு பகுதியாக உள்ளது. இந்நிறுவனம் நேரடியாக 5ஜி-க்கு அப்கிரேட் ஆகக்கூடிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை (4G is upgradable to 5G) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கம்யூனிகேஷன்ஸ் டுடே வழியாக கிடைத்த அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி டெண்டருக்கு பலவீனமான ரெஸ்பான்ஸ் கிடைத்ததற்கு காரணம் - டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தானாம். டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (T&C) படி, ஏலதாரர்கள் மூலதன செலவு (கேபெக்ஸ்) மற்றும் செயல்பாட்டு செலவு (ஒபெக்ஸ்) ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் வெளியிட்ட 4ஜி டெண்டரில் இந்த விதிமுறைகள் இல்லை, இதில் சேவைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு பிஎஸ்என்எல் பணம் செலுத்துகிறது. ஆனால் 5ஜி டெண்டருடன், பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏலதாரர்களுடன் வருவாய் பகிர்வை செய்ய விரும்புகிறது.
அதாவது ஏலதாரர்கள் 5ஜி நெட்வொர்க்குகளை டெப்ளாய் செய்வார்கள், பிஎஸ்என்எல் ஆனது அதை சந்தைப்படுத்தி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும். இந்த இடத்தில் தான் பிஎஸ்என்எல் மற்றும் ஏலதாரர்களுக்கு இடையேயான வருவாய் பிளவு முடிவு செய்யப்படும். வருவாயில் குறைந்தபட்சம் 70% பங்கை பிஎஸ்என்எல் கேட்டுள்ளது.
இரண்டாவது அப்டேட் - பிஎஸ்என்எல் நிறுவனமானது 5ஜி எஸ்ஏ சேவைகளை வழங்க 900மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்களை பயன்படுத்தும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே ஸ்டேண்ட்அலோன்5ஜி நெட்வொர்க்கை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாகும். அதாவது ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஸ்டேண்ட்அலோன் 5ஜி தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதாவது ஜியோவின் 5ஜி தற்போதுள்ள 4ஜி உள்கட்டமைப்பை நம்பி இல்லை.
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் ஆனது இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும். ஏனெனில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 5ஜி எஸ்ஏ நெட்வொர்க்குகளை வெளியிடுவதில் வெற்றி பெற்றால், உலகளாவிய சந்தையில் இந்தியாவையும் அதன் நிறுவனங்களையும் முக்கிய பங்குதாரர்களாக நிலைநிறுத்த முடியும்!
பிஎஸ்என்எல் அதன் 5ஜி வெளியீட்டில் தீவிரமாக வேலை செய்யும் மறுபக்கம், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள்.டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Telecom Regulatory Authority of India) சிக்கி தவிக்கின்றன.
டேட்டா நன்மைகள் இல்லாத வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு இணங்க ஜியோவும், ஏர்டெல்லும் தலா 2 திட்டங்களை அறிமுகம் செய்தன. விஐ நிறுவனம் முதலில் ஒருயொரு திட்டத்தையும் (இப்போது இன்னொரு திட்டத்தையும்) அறிமுகம் செய்தது / செய்துள்ளது. பின்னர் எல்லா திட்டங்களின் விலைகளும் அதிகமாக உள்ளன என்பதால் அனைத்துமே விலை குறைப்பை பெற்றன. ஆனால் இதில் கூட பிஎஸ்என்எல் தான் வின்னர். ஏனென்றால் இது ரூ.99 க்கு வாய்ஸ் ஒன்லி பிளானை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








