BSNL-க்கே இந்த தீபாவளி.. 4ஜி-க்கு மாத்திடுங்க.. முதல்ல 75000 பகுதிகளில்.. அப்புறம் என்ன.. குஷியில் கஸ்டமர்கள்!
அண்ணன் வரார் வழிவிடு என்பதுபோல ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், 4ஜி சேவை மூலம் மார்கெட்டில் மறுபடியும் களமிறங்க இருக்கிறது. இப்போது வரும், அப்போது வரும் என்று கஸ்டமர்கள் காத்திருந்து கலங்கியதெல்லாம் முடிந்தே விட்டது. ஏனென்றால், வரும் தீபாவளிவுக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படி 4ஜி சேவைகள் வர இருக்கிறது. இதற்கான பணிகள் அடிச்சு புடிச்சு செய்யப்பட்டு வருகிறது. இப்போது அமைச்சரிடமிருந்து லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி டவர்கள் அமைக்கும் பணிகளை பார்த்தால், கஸ்டமர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்போல, ஏனென்றால், அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி டவர்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட இருக்கின்றன. இதனால், தீபாவளியில் இருந்து கஸ்டமர்களுக்கு 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

சொல்லப்போனால், தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) தொடங்கப்பட இருப்பதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு உறுதி செய்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் 247 இடங்களில் இந்த 4ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த பகுதிகளில் குக்கிராமங்களும் அடங்கும். படிப்படியாக 4ஜி சோதனைகள் நடந்து வருகின்றன என்பதையும் அவர் தெரியப்படுத்தினார். இதற்கு பிறகு திருவள்ளூர் மாவட்டத்தின் நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பட்டு, திருவெள்ளைவாயல், பொன்னேரி, அத்திப்பேடு, ஆர்கே பேட்டை, செம்பேடு, பூனிமாங்காடு, கோரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மற்ற மாவட்டங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா, 1 லட்சம் 4ஜி டவர் அமைக்கும் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டின் நடுவில் முடியும்.
மொபைல் இன்டர்நெட் சேவை கிடைக்காத 25,000 கிராமரங்களுக்கு 4ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். ஆகவே, நகரங்களில் மட்டுமில்லாமல், கிராமங்களிலும் 4ஜி சேவையை பெற முடியும். சொல்லப்போனால், வரும் தீபாவளிக்குள் 75000 டவர்களை அமைக்கும் பணி முடியும் என்று ஏற்கனவே சிந்தியா தெரிவித்தார். இது கிட்டத்தட்ட முக்கால் வாசிக்கும் அதிகமாகும்.
ஆகவே, இதில் பாதிக்கும் மேல் சோதனை முடிந்த டவர்கள் மூலம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இதனாலேயே தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் இருந்து 4ஜி சேவைகள் கிடைக்கும் என்று தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு தெரிவிருந்தார். ஆகவே, வரப்போகும் தீபாவளி பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்குதான் என்று சொல்லலாம்.
ஆகவே, பிஎஸ்என்எல் 2ஜி (BSNL 2G) மற்றும் 3ஜி சிம் கார்டுகளை (3G SIM Cards) வைத்திருக்கும் கஸ்டமர்கள் 4ஜி சிம் கார்டாக மாற்றி கொள்வது நல்லது. பிஎஸ்என்எல் அலுவலகங்கள், பிஎஸ்என்எல் மேலாக்கள் போன்றவற்றில் சிம் கார்டுகளை எளிதாக 4ஜி சேவைக்கு மாற்றி கொள்ளலாம். அதேபோல ஆன்லைனில் பிஎஸ்என்எல் சிம் போர்ட் (BSNL SIM Port) செய்து கொள்ள ஆப்ஷன் இருக்கிறது.
எப்படி போர்ட் செய்வது எப்படி? மற்ற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற விரும்பும் கஸ்டமர்கள், உங்களது மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் அனுப்பி யுனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) ரெக்கொஸ்ட் கொடுக்க வேண்டும். அதாவது, அந்த நம்பருக்கு முதலில் போர்ட் (Port) என டைப் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு [ஸ்பேஸ்] விட்டு உங்களின் 10 இலக்க மொபைல் நம்பரை டெப் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதை செய்து முடித்தால் அடுத்த 15 நாட்களுக்கான யுபிசி போர்ட் அவுட் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களுக்குள் உங்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு சென்று சிம் கார்டு போர்ட் செயலை செய்து முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications








