தந்திக்கு டாடா சொல்லும் இந்தியா!!

Written By:

முன்பெல்லாம் தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே பத பதைத்த நியாபகங்கள் பலருக்கும் இருக்கும்.

ஆனால் இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான, பதை பதைக்க வைக்கும் இந்த தந்தி சேவைக்கு வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் 'குட் பை' பி.எஸ்.என்.எல் முடிவு செய்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது சகலரும் உபயோகிக்கும் செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், பெரும்பாலானோர் பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்ததனர்.

Click Here For New Hot Gadgets Gallery

தந்திக்கு டாடா சொல்லும் இந்தியா!!

இந்தியாவில் 1855-ம் ஆண்டுதான் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியுள்ளது.

இதனால் குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.

அத்துடன் கம்ப்யூட்டர் புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக் கொண்டுவிட்டனர்.

இதன் விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட்டதால்,அச் சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot