அம்பானி, மிட்டலுக்கு கெட் அவுட்.. இனி 20,000 அரசு பள்ளிகளில் BSNL தான் ராஜா.. தமிழ்நாடு அரசு அதிரடி!
அரசு பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, தமிழ்நாடு அரசானது (Tamil Nadu Govt) பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. அப்படி என்ன செய்துள்ளது? அதென்ன திட்டம்? எப்போது முதல் நடைமுறைக்கு வரும் இதோ விவரங்கள்:
தனியார் தொலைத்தொடர்பு துறைகளை (Private telecom sectors) தேர்வு செய்யாமல், வருகிற 2025 ஏப்ரல் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் (All Govt Schools) பிஎஸ்என்எல் இணையதள வசதியை (BSNL internet facility) தேர்வு செய்யுமாறு அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் (Directorate of School Education)அறிவுறுத்தியுள்ளது.

இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை (Monthly service charge for internet service) ஏப்ரல் முதல் மையப்படுத்தப்பட்ட பில் செலுத்துவதன் மூலம் நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் (Chief Education Officers) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமக்ர சிக்ஷா (Samagra Shiksha - SS) திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல்-க்கு பதிலாக இணையதள சேவையை பெறும் பள்ளிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் பட்டியலிடப்பட்டு, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் இண்டர்நெட் கனெக்ஷனை (BSNL Internet Connection) எடுத்து, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (Education Management Information System - EMIS) பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் விரைவில் அதுகுறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நினைவூட்டும் வண்ணம், கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 20000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு இணைய இணைப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் தமிழ்நாடு அரசாங்கம் (TN government - BSNL ) கையெழுத்திட்டது.
இதற்கிடையில் தான், ஒன்றிய அரசானது, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு எஸ்எஸ் திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடி நிதியை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு, 2023-24 கல்வியாண்டில் 3533 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டது, ஆனால் கல்வி அமைச்சகம் இன்னும் தமிழ்நாட்டின் பங்கை வெளியிடவில்லை.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் நிறுவனமானது இன்னமும் பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை (BSNL PAN India 4G Launch) அறிமுகம் செய்யவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் 4ஜி நெட்வொர்க் முழுமையாக அறிமுகமான வேகத்தில் 5ஜி நெட்வொர்க் (BSNL 5G Launch) அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அதற்காக தான் பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொழில்நுட்பம் ஆனது உள்நாட்டிலேயே தயார் ஆகிறது; இதற்கு தான் 4ஜி, 5ஜி அறிமுகம் தள்ளிக்கொண்டே போகிறது. இருப்பினும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் திடீரென கூட்டம் கூட்டமாக புதிய கஸ்டமர்கள் (New Customers) சேர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர் மற்றும் 17 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி லாபமும் (BSNL Profit) பார்த்துள்ளது.இதற்கு காரணம் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் அநியாய விலை உயர்வு தான்!
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஜூலை 3 ஆம் தேதி முதல், முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகியவைகள் தத்தம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை கடுமையாக (10 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை) உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் எந்த விலை உயர்வையும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications