Home
News

நாம சாதிச்சுட்டோம் மாறா.. ரூ.1500 கோடி லாபம்.. BSNL 4G, 5G ரெண்டுமே ஒன்னா.. கம்மி விலைக்கு.. அஷ்வினி அதிரடி!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (Bharat Sanchar Nigam Limited) கீழ் உள்ள கஸ்டர்மார்களை குஷிப்படுத்தும் சில தகவல்களை, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் (Union Telecom Minister) ஆன அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) வெளிப்படுத்தியுள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனமானது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது அது புத்துயிர் பெற்றுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையில் பயன்படுத்தும் அதே கருவியை பயன்படுத்தி 5ஜி சேவையை அறிமுகப்படுத்த (Launch 5G using same equipment using for 4G) திட்டமிட்டுள்ளது.

BSNL 4G, 5G ரெண்டுமே ஒன்னா.. கம்மி விலைக்கு.. அஷ்வினி அதிரடி!

அதாவது பரந்த அளவிலான 4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் அறிமுகங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருக்காது என்று அர்த்தம். பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea - Vi) உள்ளிட்ட தனியார் விருப்பங்களை தவிர, வேறொரு ஆபரேட்டரிடமிருந்து சேவைகளை வாங்குவதற்கான வாய்ப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.

நினைவூட்டும் வண்ணம், அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தை (Homegrown technology) பயன்படுத்தி 4ஜி சேவையை வழங்கவுள்ளது. இதற்கான தொழிநுட்பத்தை டிசிஎஸ் (TCS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) தலைமையிலான கூட்டமைப்பு (டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் மற்றும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ்) வழங்கும்.

BSNL 4G, 5G ரெண்டுமே ஒன்னா.. கம்மி விலைக்கு.. அஷ்வினி அதிரடி!

4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்குவதற்காக, உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பம் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் யோசனையானது பிற வளரும் நாடுகளின் (Developing nations) ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் இது தொடர்பான உபகரணங்களை உலகளவில் வழங்கும் பெரிய மற்றும் விலையுயர்ந்த விற்பனையாளர்களை நம்புவதற்கு பதிலாக, குறைந்த செலவிலும் இதை செய்ய முடியும் என்பதற்கு பிஎஸ்என்எல் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

இப்படியாக எல்லாம் சரியாக நடந்தாக, 4ஜி அறிமுகமான பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனமானது வயர்லெஸ் சேவை சந்தையில் (Wireless Services Market) அதிக பங்கைப் பெற்று, FY27-க்குள் லாபகரமான நிறுவனமாக மாறும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ​மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

BSNL 4G, 5G ரெண்டுமே ஒன்னா.. கம்மி விலைக்கு.. அஷ்வினி அதிரடி!

மேலும் அவர் பிஎஸ்என்எல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளதாகவும், இபிஐடிடிஏ (EBITDA) லெவலில், அதாவது வட்டி வரி, தேய்மானம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு முந்தைய வருவாய் (Earnings before interest tax, depreciation and amortization) மட்டத்தில் ரூ.1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மோசமான நிதி நிலைமையில் உள்ள வோடபோன் ஐடியா (Vi) நிறுவனத்தில் இந்திய அரசாங்கம் முதலீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​அஷ்வினி வைஷ்ணவ் நேரடியான பதிலை கொடுக்கவில்லை. மாறாக.. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன என்கிற சூழ்நிலையை (Duopoly Scenario) தவிர்க்க சந்தையில் குறைந்தது மூன்று பெரிய நிறுவனங்களாவது இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். அதாவது விஐ உடனான முதலீட்டை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார் என்பது போல் தெரிகிறது!

Best Mobiles in India

English summary
BSNL to Launch 5G using same equipment using for 4G Union telecom minister Ashwini Vaishnaw
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X