BSNL கஸ்டமர்ஸ் 4G சிம் வாங்க ரெடியா இருங்க! தூத்துக்குடியில் ஆரம்பம்! எங்கு கிடைக்கும்?
தமிழ்நாட்டில் ஈரோடு, திருநெல்வேலிக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தில் பிஎஸ்என்எல் (BSNL) 4G சேவைக்கான டவர் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், 4G சிம் கார்டுகளை எப்படி பெற வேண்டும் என்பது அனைத்து மாவட்ட கஸ்டமர்களுக்கும் பொதுவானதுதான். இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு பின் 5ஜி சேவைக்கே மாறிவருகின்றனர். ஆனால், டெலிகாமில் மிகப்பெரும் பெயர்பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், இன்றளவும் 4ஜி சேவையை (BSNL 4G Services) கூட அனுபவிக்கவில்லை.

இதனால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் (BSNL Customers) துவண்டு போய்விட்டனர். "இப்போது வரும், அப்போது வரும்" என்று காத்திருந்து விரக்தியின் உச்ச நிலைக்கே போய்விட்டனர் என்று கூட சொல்லலாம். இதன் காரணமாக, மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அவர்கள் மாறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்திலே மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க ஏதுவாக அலைக்கற்றைகளை ஒதுக்கியது மட்டுமல்லாமல், ரூ. 89,047 கோடியை செலவுக்காக விடுவித்துள்ளது.
அந்த வகையில், ரூ. 46,338 கோடிக்கு 700 MHz அலைவரிசையும், ரூ. 26,184 கோடிக்கு 3300 MHz அலைவரிசையும், ரூ. 6,564 கோடிக்கு 26 GHz அலைவரிசையும், ரூ. 9,428 கோடிக்கு 2500 MHz அலைவரிசையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதோடு நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 4ஜி டவர்களை மேம்படுத்தும் பணியையும் அதிதீவிரமாக செய்துவருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாட்டின் ஈரோடு, திருநெல்வேலி மாவட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டத்திலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான (BSNL 4G Services in Thoothukudi) டவர்களை மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், ஏற்கனவே இருக்கும் 222 பிஎஸ்என்எல் டவர்களில் 10 MHz அலைவரிசை கொண்ட 4ஜி சேவைக்கான தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், புதிதாக 24 4ஜி டவர்கள் நடப்பட்டுள்ளன. இன்னும் 2 வாரங்களில் 4ஜி சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேவைகளை பெற பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4ஜி சிம் கார்டுகளை வாங்க வேண்டியிருக்கும். இந்த பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எள் வாடிக்கையாளர் சேவை மையங்கள், மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும்.
ஆகவே, விரைவில் சிம் கார்டுகளை மாற்றுவது நல்லது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications