இந்தியாவில் 5G சேவை அறிமுகம்: BSNL நிறுவனத்தின் 4ஜி சேவை குறித்து முக்கியத் தகவல்.!

|

இந்தியாவில் ஒருவழியாக 5ஜி சேவை அறிமுகமானது. தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. எனவே தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்க உள்ளன.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

 பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதாவது கடந்த 2019-ம் ஆண்டு 4ஜி சேவையை வழங்க BSNL நிறுவனம் திட்டமிட்டது. குறிப்பாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு தான் தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு தெரிவித்தது. எனவே இதைத் தொடர்ந்து தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு
தமாதமானது.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

அதன்பின்பு 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இந்த கோரிக்கைக்கு டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைக்கான சோதனைகள்துவங்கின.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ்

மேலும் தற்போது பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 4ஜி சேவையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த இரு நிறுவனங்கள் இடையே ரூ.16 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாகக் கூறப்படும் இந்த வேளையில், சலுகைகள் வழங்குவது மற்றும் விலை நிர்ணயம் பற்றிய இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

13 நகரங்களில் அறிமுகம்

13 நகரங்களில் அறிமுகம்

அதேபோல் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் உள்பட 13 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக இந்த 5ஜி சேவை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

இன்னும் சில வாரங்கள் ஆகும்

இன்னும் சில வாரங்கள் ஆகும்

குறிப்பாக இந்த 5ஜி சேவை அறிமுக நிகழ்ச்சியில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 5ஜி சேவை இன்று அறிமுகமானாலும் கூட அவை உங்கள் மொபைலுக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும். 5ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள்,விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் பிரதமர் மோடி மேற்பார்வையிட்டார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL to launch 4G services in India soon: tie up with TCS: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X