Home
News

சென்னைக்கு நல்ல செய்தி சொன்ன BSNL.. வரப்போகுது 4G சேவை.. உற்சாகத்தில் பயனர்கள்..

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை தனது திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. அதேபோல் சமீபத்தில் கூட பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து அதிர கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளது.

timesnownews வெளியிட்ட தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் Phase IX.2 திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னைக்கு நல்ல செய்தி சொன்ன BSNL.. வரப்போகுது 4G சேவை..

குறிப்பாக Phase IX.2 திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் 2114 4ஜி டவர்களை அமைப்பதற்கான பணிகள் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த திட்டத்திற்கான செலவு 16.25 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விரைவில் சென்னை முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைத் (BSNL Rs 249 prepaid plan)தான் அறிமுகம் செய்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. குறிப்பாக இதுபோன்ற திட்டத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே வழங்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ள சில கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

சென்னைக்கு நல்ல செய்தி சொன்ன BSNL.. வரப்போகுது 4G சேவை..

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் , அரினா கேம்ஸ் (Arena Games) சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட நன்மைகளும் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL to launch 4G service in Chennai and neighboring districts: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X