Home
News

காத்திருந்தது போதும்: இன்னும் 2 வாரங்களில் 4ஜி சேவையை வழங்கும் BSNL : அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.!

இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே 5ஜி சேவை அறிமுகம் செய்துவிட்டன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்த மாதம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யவில்லை. ஆனால் தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அடுத்த 2 வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையைத் தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

காத்திருந்தது போதும்: இன்னும் 2 வாரங்களில் 4ஜி சேவையை வழங்கும் BSNL.!

அதேபோல் வரும் டிசம்பர் மாத வாக்கில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். குறிப்பாக அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். பின்பு மூன்று மாத கால சோதனை ஓட்டத்திற்குப் பிறகு நாள் ஒன்றுக்கு 200 தளங்கள் என்ற அடிப்படையில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும். இதற்கு மென்பொருள் ரீதியாக சிறிய அளவு மட்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த 4ஜி சேவைக்கான பணிகளை டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ளன. அதேபோல் நாடு முழுவதும் சுமார் 1.23 லட்சம் சைட்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த சில கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

காத்திருந்தது போதும்: இன்னும் 2 வாரங்களில் 4ஜி சேவையை வழங்கும் BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்: பிஎஸ்எனஎல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம்: பிஎஸ்எனஎல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

காத்திருந்தது போதும்: இன்னும் 2 வாரங்களில் 4ஜி சேவையை வழங்கும் BSNL.!

பிஎஸ்எனஎல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதிலும் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை என்று அனைத்து நன்மைகளும் வழங்கப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள ரூ. 184 மற்றும் ரூ. 185 திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் இதில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இது BSNL ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலை மட்டும் கூடுதலாகப் பெறுகிறது. வழக்கம் போல நிறுவனம் வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக மாற்றப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL to launch 4G service in 2 weeks: Full details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X