Home
News

அப்படி போடு: BSNL 4ஜி சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களை விட குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவையை அறிமுகம் செய்து விட்டது.

தற்போது ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி உள்ளன. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க உள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது.

BSNL 4ஜி சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

பிஎஸ்என்எல்- டிசிஎஸ்

தற்போது வெளிவந்த தகவல் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க சுமார் 1 லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. பின்பு இதற்காக ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎல் உபகரணங்களைப் பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது.

குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனங்களின் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த இருக்கிறது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனம் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

BSNL 4ஜி சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

நிர்வாக குழு ஒப்புதல்

அதேபோல் 4ஜி சேவையை வழங்க தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டிற்கு மேலும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இப்போது டிசிஎஸ் உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் பயன்படுத்த அனுமதி மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொள்முதல் ஆணை வழங்குவதற்கு மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

அடுத்தது மத்திய டெலிகாம் துறை சார்பில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் மார்ச் மாத வாக்கில் டிசிஎஸ் நிறுவனத்திற்குக் கொள்முதல் ஆணை பிறக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதற்கான மொத்த தொகை ரூ.24,556.37 கோடி ஆகும்.

BSNL 4ஜி சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

குறிப்பாக இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகளை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டிசிஎல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை வழங்குகிறது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம்

பிஎஸ்என்எல்ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்ற அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

BSNL 4ஜி சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

பிஎஸ்என்எல் ரூ.2999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா
நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL to launch 4G service in 1 lakh areas with TCS: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X