Home
News

நல்ல காலம் பொறந்துடுச்சு.. BSNL கிட்ட 4G இல்ல, 5G இல்லனு சொன்னவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பீங்க?

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) குறித்து வெளியாகி உள்ள சமீபத்திய தகவலொன்று, இதுநாள் வரையிலாக இந்நிறுவனத்திடம்.. பரந்த அளவிலான 4ஜி இல்லை, 5ஜி அறிமுகம் பற்றிய தெளிவே இல்லை என்று எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தரமான பதிலடி கொடுப்பது போல் உள்ளது.

2ஜி மற்றும் 3ஜி சேவைகளோடு சேர்த்து பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவைகளையும் வழங்குகிறது. ஆனால் அது நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளானது தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டங்களில் மட்டுமே, அதுவும் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

BSNL கிட்ட 4G இல்லனு சொன்னவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பீங்க?

மறுகையில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel), புயல் வேகத்தில் தங்களுடைய 5ஜி சேவைகளை நாடு முழுவதும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இது பிஎஸ்என்எல்-க்கு பின்னடைவாக இருப்பது மட்டுமின்றி, அதன் மீதான விமர்சனங்களுக்கும் காரணமாக உள்ளது.

இந்நிலைப்பாட்டில் தான், மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (Communications and Electronics and Information Technology) அமைச்சர் ஆன அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw), பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் பிஎஸ்என்எல் 5ஜி தொடர்பான ஒரு சில தரமான தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார்.

அஷ்வினி வைஷ்ணவ்வின் கூற்றுப்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, நாடு முழுவதும் தினமும் 300 பிஎஸ்என்எல் டவர்கள் (BSNL Towers) நிறுவப்படும். அதை தொடர்ந்து அடுத்த 12 முதல் 16 மாதங்களுக்கு பிறகு, பிஎஸ்என்எல் வழியாக உங்களுக்கு மிகச்சிறந்த 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் கிடைக்கும்".

மேலும் அவர், "பிஎஸ்என்எல்-ன் 4ஜி மற்றும் 5ஜிக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது; இதன் மூலம் உலகளவில் எண்ட்-டு-எண்ட் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் (End-to-end Tele Communications Technology) வளர்ச்சியை எட்டிய 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருமாறியுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

முன்னரே குறிப்பிட்டபடி தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைகள் வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அணுக கிடைக்கிறது. ஆனால் அஷ்வினி வைஷ்ணவ் வழியாக கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது வரவிருக்கும் நாட்களில் பிஎஸ்என்எல் 4ஜி-யின் கவரேஜ் வேகமாக விரிவடையும் என்பது போல் தெரிகிறது.

சுவாரசியமாக பிஎஸ்என்எல்-ன் கீழ் கிடைக்கும் 2ஜி / 3ஜி டேட்டா பேக்குகளை (Data Packs) ரீசார்ஜ் செய்வதன் வழியாகவே பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை பயன்படுத்தலாம். அதாவது 4ஜி-க்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் பரந்த அளவில் அறிமுகமானதும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம் மேல் லடாக்கில் (Upper Ladakh) உள்ள 26 கிராமங்களில் 4ஜி-ஐ அறிமுகப்படுத்திய முதல் டெலிகாம் ஆப்ரேட்டர் என்கிற பெருமை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமே உள்ளது. அதே பகுதிகளில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த முதல் டெலிகாம் நிறுவனம் என்கிற பெருமை பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL To Install Daily 300 BSNL Towers Across The Country To Give Best 4G And 5G services
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X