Home
News

நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவும் பிஎஸ்என்எல்.! 4ஜி சேவை விரைவில்.!

இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. குறிப்பாக இதற்கான பணிகளில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் களமிறங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 பிஎஸ்என்எல் தனது 4ஜி

அதாவது பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைதொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும் என தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார். குறிப்பாக 4ஜி தொலைதொடர்பு சேவையை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த சேவை இந்திய என்ஜினீயர்கள், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்நெட் சேவை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு

மேலும் ரயில் துறையும் தனது சேவைகளையும், சேவை தரத்தையும் மேம்படுத்தி வரும் நிலையில், ரயில்களிலும் இண்டர்நெட் சேவை அளிக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்பு இதுகுறித்து ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார் அஷ்வினி வைஷ்னா.

ணிக்கு 100 கிமீ வேகத்தில் ஓடும் ரயி

அதாவது மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களில் 4ஜி தொழில்நுட்பம் மூலம் தொடர்பு தடைப்படும் என்பதால், 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டால் மட்டுமே ரயில்களுக்குள் இடைவிடாத இணைய இணைப்பு கிடைக்கும் என்று அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

நிறுவனம் 4ஜி சேவை நாடு

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை நாடு முழுவதும் அளிக்க வேண்டும் என்பதற்காக முற்கட்டமாக நாட்டின் முக்கிய பகுதிகளில் சுமார் 6000 டவர்களை உடனடியாகவும், அடுத்த சில காலத்தில் கூடுதலாக 6000 டவர்களையும் நிறுவ உள்ளது. இறுதியாக 1 லட்சம் டவர்களும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறி

அதேசமயம் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறிமுகம் செய்தவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார். மேலும் இப்போது 30 நாட்கள் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஸ்என்எல் எஸ்டிவி-147

பிஸ்என்எல் எஸ்டிவி-147

பிஎஸ்என்எல் எஸ்டிவி-147 என்று அழைக்கப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச BSNL ட்யூன்களைப் பெறமுடியும். அதேபோல் இந்தபிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

 பிஎஸ்என்எல் எஸ்டிவி_247

பிஎஸ்என்எல் எஸ்டிவி_247

பிஎஸ்என்எல் எஸ்டிவி_247 என்று அழைக்கப்படும் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் 50ஜிபி டேட்டாவை தவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, எஸ்எம்எஸ் நன்மை, உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-299

பிஎஸ்என்எல் எஸ்டிவி-299

பிஎஸ்என்எல் எஸ்டிவி-299 என்று அழைக்கப்படும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களைப் பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
BSNL to install 1.12 lakh towers across the country! 4G service coming soon.: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X