வந்துட்டான் வந்துட்டான்.. BSNL 5G எஸ்ஏ வெளியீடு குறித்த முக்கிய அப்டேட்!
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, இந்தியா முழுவதும் அதன் 4ஜி சேவையை இன்னும் விரிவுபடுத்தும் என்றும், இந்த 4ஜி நெட்வொர்க் விரிவாக்கம் நிதியாண்டு 27 இல் தொடரும் என்று பிஎஸ்என்எல்-ன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜே ரவி உறுதிப்படுத்தி உள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மேலும் 20,000 தளங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இடி-யின் (ET) ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் அதன் 4ஜி வெளியீட்டில் சிறப்பாக முன்னேறி வருகிறது, மேலும் அடுத்த ஆண்டு விரிவாக்கத்தைத் தொடரும். நாடு முழுவதும் எங்கள் நெட்வொர்க் கவரேஜை வலுப்படுத்த சுமார் 20,000 கூடுதல் தளங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூடுதலாக, செயல்பாட்டு செலவு (ஒபெக்ஸ்) மாதிரியில் மேலும் 10,000 தளங்களை பயன்படுத்துவதற்கான டெண்டரை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் ஓபெக்ஸ் மாதிரியில் 5ஜி எஸ்ஏ (ஸ்டேன்ட் அலோன்) சேவையை அறிமுகப்படுத்தவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆர்டர்களை நிச்சயமாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மட்டுமே செயல்படுத்தும். தற்போது, பிஎஸ்என்எல் முதலில் 4ஜி-ஐ விரிவுபடுத்த பார்க்கிறது, இதன் மூலம் விரைவில் அதிக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும்.
இப்போதைக்கு, சுமார் 97,000 தளங்கள் நேரடியாக செயல்பட்டு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி-ஐ வழங்குகின்றன. இந்த தளங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் வலுவான மற்றும் நம்பகமான 4ஜி கவரேஜை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. எதிர்கால உள்நாட்டு தொழில்நுட்ப தத்தெடுப்புக்கான பல்வேறு மாதிரிகளை மதிப்பிடுவதோடு, ஏஐ டூல்களை பயன்படுத்தி எங்கள் நெட்வொர்க்கை முறையாக வலுப்படுத்துகிறோம் என்றும் ரவி கூறியுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை (வோவைஃபை / VoWi-Fi) சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4ஜி நெட்வொர்க்குகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான உட்புற நெட்வொர்க் கவரேஜ் அனுபவத்தையும் பெற உதவுகிறது. இது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. இது ஏற்கனவே உள்ள பயனர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் புதியவர்களை சேர்ப்பதற்கும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வோவைஃபை என்றால் என்ன? வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை தொழில்நுட்பம் ஆனது டெலிகாம் சந்தாதாரர்கள் வைஃபை மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கிறது. இது சவாலான சூழல்களில் (அதாவது நெட்வொர்க் சரியாக கிடைக்காத அல்லது இல்லாத பகுதிகளில் அல்லது நேரங்களில்) மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது.
குறிப்பாக மொபைல் கவரேஜ் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், இந்த வோவைஃபை சேவையானது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள் மற்றும் தொலைதூர இடங்கள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள பகுதிகளிலும் கூட வோவைஃபை சேவையானது கனெக்ட்விட்டியை மேம்படுத்துகிறது.
பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி, எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்களின் தேவையும் இல்லாமல், சந்தாதாரரின் தற்போதைய மொபைல் நம்பர் மற்றும் டயலர் ஆப் மூலம் வோவைஃபை அழைப்புகள் செய்யப்படுகின்றன. இது நெட்வொர்க் நெரிசலை குறைக்கவும் உதவுகிறது என்றும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் பிஎஸ்என்எல் கூறுகிறது.
பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வோவைஃபை காலிங் அம்சத்தை இயக்குவது எப்படி? பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் வோவைஃபை சேவைக்கான ஆதரவு ஏற்கனவே உள்ளது. இந்த சேவையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் போன் செட்டிங்ஸ்க்கு (Phone Settings) சென்று வைஃபை காலிங் அம்சத்தை (Wi-Fi Calling Feature) இயக்கலாம்.
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட சேவைக்கான ஆதரவு உள்ளதா என்பதை சரிபார்க்க மற்றும் கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை (BSNL customer service centre) பார்வையிடலாம் அல்லது பிஎஸ்என்எல் உதவி எண்ணிற்கு (BSNL helpline 18001503) அழைக்கலாம்.


Click it and Unblock the Notifications








