Home
News

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. மூன்று திட்டங்களை நீக்கும் BSNL.. எந்தெந்த திட்டங்கள்?

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமூக வலைத்தளங்களில் பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் போனுக்கு வந்துள்ள எஸ்எம்எஸ் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளனர். அதில் முக்கிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்கள் வரும் 10.02.2025 முதல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. மூன்று திட்டங்களை நீக்கும் BSNL..

குறிப்பாக இந்த செய்தியை வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஸ்என்எல் எண்ணில் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். அதுவும் விரைவில் நிறுத்தப்படும் இந்த மூன்று திட்டங்களும் அதிக வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த மூன்று திட்டங்கள் வழங்கும் நன்மையைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி
டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 797 prepaid plan) டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. அதன் பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும்.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் வழங்குகிறது.. மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. மூன்று திட்டங்களை நீக்கும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.201 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 201 prepaid plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுத்தின் ரூ.2999 மற்றும் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டங்கள் சிறந்த நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டங்கள் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் பிஎஸ்என்எல் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL to discontinue three affordable recharge plans.. Which plans? check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X