Home
News

முழுசா 365 நாள்.. தினமும் 3ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், பட்ஜெட் விலையில் வாரி வழங்கும் BSNL.. மிஸ் பண்ணாதீங்க

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் இந்தியாவில் முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்நிறுவனம் அதிக இடங்களில் 4ஜி சேவையை வழங்க உள்ளது.

எனவே பிஎஸ்என்எல் சிம் வைத்திருக்கும் பயனர்கள் இப்போதே ஒரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 365 நாள் வேலிடிட்டி வழங்கும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முழுசா 365 நாள்.. பட்ஜெட் விலையில் வாரி வழங்கும் BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் நன்மையும் உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்.

முழுசா 365 நாள்.. பட்ஜெட் விலையில் வாரி வழங்கும் BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 plan) ஆனது மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் எப்போது வேண்டும் என்றால் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இதில் கிடைக்கிறது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL three prepaid plans offer 365-day validity, unlimited voice calls and more data benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X