BSNL 3 பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. என்ன விலை?
ஜியோ (Jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். இதுதவிர 4ஜி சேவை, லைவ் டிவி சேனல், 5ஜி சோதனை என பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல். இதனால் அதிக மக்கள் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 30 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் ஓடிடி நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும்
சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








