எப்போது BSNL ரீசார்ஜ் விலை உயரும்? ராபர்ட் ரவி நெத்தியடி பதில்.. அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க!
முதலில் ஏர்டெல், அதனை தொடர்ந்து ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் 3 முக்கிய டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே, தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை "கடுமையாக" உயர்த்தி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகின்றன. நினைவூட்டும் வண்ணம், மேற்கண்ட 3 நிறுவனங்களுமே ஜூலை மாத தொடக்கத்தில் கட்டண உயர்வை அறிவித்தன.
ஆனால் 4வது பெரிய நிறுவனமான பிஎஸ்என்எல் - இந்திய டெலிகாம் சந்தையில் எதுவுமே நடக்காதது போல - எந்த விதமான திட்டங்களின் மீதும் சிறிய அளவிலான விலை உயர்வை கூட அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன் "மறைமுகமான விலை உயர்வாக" கருதப்படும் "வேலிடிட்டி குறைப்பை" கூட செய்யவில்லை. இத்தனைக்கும் இந்நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சந்தாதாரர்களை இழந்து வருகிறது!

ஆனால் கடந்த 2024 ஜூலை மாதத்தில் 2.9 மில்லியன் (அதாவது கிட்டத்தட்ட 30 லட்சம்) பயனர்களை சேர்த்துள்ளது. தனியார் நிறுவனங்களின் "அநியாய" விலை உயர்வில் சிக்கி சின்னாபின்னமாக விரும்பாத பலரும் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியதே இதற்கு முதல் மற்றும் முக்கிய காரணமாகும். இரண்டாவது காரணம் - இந்தியாவிலேயே மிகவும் மலிவான பல திட்டங்கள் பிஎஸ்என்எல் கைவசம் உள்ளன.
"எல்லாம் சரிதான்.. இன்னும் விலை உயர்வை அறிவிக்காத ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே.. இது எப்போது விலை உயர்வை அறிவிக்கும்?" என்கிற கேள்வி நாளுக்கு நாள் மேலோங்கி கொண்டே வருகிறது. இந்த கேள்விக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆன ராபர்ட் ஜே ரவி தரமான பதில்களை கொடுத்துள்ளார்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய லோகோவை அறிமுகம் செய்த போது, பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன ராபர்ட் ரவி, இப்போதைக்கு பிஎஸ்என்எல்-ன் முதன்மை நோக்கமே - வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வதும், நுகர்வோர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதும், அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதுமே ஆகும். எனவே இப்போதைக்கு கட்டண உயர்வு தேவையில்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளார்!
புதிய லோகோவுடன் சேர்த்து ஏழு புதிய சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்பேம் பிளாக்கிங் சொல்யூஷனை (Spam-blocking solution) அறிமுகம் செய்துள்ளது.இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் நிகழ்நேரத்தில் மோசடிகள் மற்றும் ஸ்பேம் காண்டாக்ட்களை அகற்ற கஸ்டம் சொல்யூஷனை (Custom Solution) பயன்படுத்துகிறது.
மேலும் வைஃபை ரோமிங் சேவையையும் அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் பயனர்கள் பயணம் செய்யும் போது, எந்தவொரு பிஎஸ்என்எல் எப்டிடிஎச் வைஃபை நெட்வொர்க்குடனும் (BSNL FTTH Wi-Fi network) கனெக்ட் ஆக முடியும். அடுத்ததாக இன்ட்ராநெட் லைவ் டிவி (Intranet live TV) சேவை. இதன்கீழ் எப்டிடிஎச் பயனர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் அடிப்படையிலான (fibre-based) இன்ட்ராநெட் லைவ் டிவி சேவையின் மூலம் 500 க்கும் மேற்பட்ட பிரீமியம் டிவி சேனல்களை (500+ Premium TV Channels) அணுகலாம்.
பின்னர் ஏனி டைம் சிம் (Any Time SIM) சேவை. இதன்கீழ், ஏடிஸ் (ATS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தானியங்கி எனி டைம் சிம் கியோஸ்க்குகள் (Kiosks) வழியாக 24/7 அடிப்படையில், வாடிக்கையாளர்களால் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்க முடியும். இதில் டிஸ்பென்ஸ (Dispense), கேஒய்சி செயல்முறை (KYC Process) மற்றும் சிம் கார்டு ஆக்டிவேஷன் (SIM card activation) ஆகியவைகள் தானாகவே நடக்கும்.
அடுத்ததாக எஸ்எம்எஸ்-களுக்கான சாட்டிலைட்-டூ-டிவைஸ் கனெக்டிவிட்டி (satellite-to-device connectivity for SMS) சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிலம், வான் மற்றும் கடலில் வேலை செய்யும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்-சாதன இணைப்பு சேவைகளையும் (India's first satellite-to-device connectivity for SMS services) பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதோடு டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்டிற்கான (Disaster management) ஒன்-டைம் சொல்யூஷன் நெட்வொர்க் மற்றும் கடைசியாக பிஎஸ்என்எல் நிறுவனமானது சுரங்கத் துறைக்கான பாதுகாப்பான 5ஜி நெட்வொர்க்கை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக - பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வது மட்டுமே பாக்கி என்கிற அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனமானது தீயாக வேலை செய்கிறது!


Click it and Unblock the Notifications








