கடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்?

|

அன்மையில் வோடபோன், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை உயரத்தவுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் சேவை கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

 டிசம்பர் மாதம்

குறிப்பாக மற்ற ஆப்ரேட்டர்களை போலவே அடுத்த சில வாரங்களில், குறிப்பாக டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய விலை நிர்ணயங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எகானாமிக் டைம்ஸ்

எகானாமிக் டைம்ஸ்

மேலும் எகானாமிக் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் அடிப்படையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது பிற தனியார் தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களை போலவே டிசம்பர் மாதத்தில் அதன் கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்

பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி தற்போது அது அதன் இலாகாவின் கீழ் உள்ள கட்டணங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் மாதத்தில் உயர்த்தப்படும். குறிப்பாக இந்த புதிய நடவடிக்கை குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது நாங்கள் தற்போது எங்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா கட்டணத்தை ஆராய்ந்து வருகிறோம், அதை டிசம்பர் 1 2019முதல் உயர்த்துவோம் என கூறியுள்ளார்.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 922 கோடி ரூபாய்

வரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன் ஐடியா இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அண்மைக் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும்இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை. இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் முதல் வோடபோன் ஐடியா சேவைக் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

45 கோடி ரூபாய்

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்லும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல், கடந்த காலாண்டில் மட்டும் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததே இதற்கு காரணம் என அந்த
நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு நஷ்டங்களை சமாளிக்க டிசம்பர் மாதம் முதல் சேவைக் கட்டணத்தை உயர்த்தப்படும் எனவும் அறிவித்தது.

ரிலையன்ஸ் ஜியோ

ஆனால் இப்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களிடம் இருந்து எம்மாதிரியான கட்டண உயர்வுகள்
அறிவிக்கப்படும் என்பது பற்றி விவரங்கள் எதுவும் இல்லை என்பது குறுப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best Offers and Deals on Samsung Smartphones during Samsung Blue Fest Sale : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X