Home
News

ஐபிஎல்-ஐ விட சூடு பிடிக்கும் பிஎஸ்என்எல் அட்டகாச சலுகைகள்: 300ஜிபி டேட்டா.! முழுவிவரம்.!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு சலுகைகளை போட்டிப்போட்டு வழங்க தொடங்கியுள்ளன.

ரூ.1,999 வருடாந்திர திட்டம்

ரூ.1,999 வருடாந்திர திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1,999 வருடாந்திர திட்டம் புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, அதன் அனைத்து வட்டங்களிலும் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.

பிஎஸ்என்எல்-ன் தினசரி 3 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல்-ன் தினசரி 3 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா போன்ற சேவைகளை வழங்கியது.

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா?

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா?

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது பிஎஸ்என்எல் இரண்டு விளம்பர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, 71 நாட்கள் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியுடன் ஒட்டுமொத்த 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல், இரண்டாவது விளம்பர சலுகையின் படி 60 நாட்கள் செல்லுபடியை வழங்கி 425 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது.

ரூ.251 டேட்டா ஒன்லி திட்டம்

ரூ.251 டேட்டா ஒன்லி திட்டம்

அதேபோல் ஜியோ தனது கைவசம் ரூ.251 டேட்டா ஒன்லி திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி தினசரி டேட்டாவை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.318 டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இதன்கீழ் தினமும் 2ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள் ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த ரூ.318 டேட்டா பேக் தற்போது, சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் மட்டுமே இப்பொழுது இந்த திட்டம் அனுக கிடைக்கிறது. ரூ.318 டேட்டா ஒன்லி திட்டத்தை போல, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இன்னும் பல அதிக டேட்டா நன்மையுடன், மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்களும் உள்ளது.

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

இந்த நிலையில் பிஎஸ்என்எல் ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.551-க்கு ரீசார்ஜ் செய்தால் பல்வேறு தினசரி 3 ஜிபி டேட்டா உபயோகிக்கலாம். இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

இருப்பினும் ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கினாலும். இதில் சிறு குறைபாடு உள்ளது என்றே கூறலாம். அது இந்த திட்டத்தில் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த முடியாது. இணையதள பயன்பாட்டாளர்கள் இது பல நன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Super star 300

Super star 300

இந்த திட்டம் பாரத் பைபர், DSL பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிகறது. இது ஹாட்ஸ்டார் பிரிமியம் பேக் இலவச சலுகையோடு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 300 ஜிபி டேட்டா ரூ.749-க்கு வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்புகளும் உள்ளது.

STV 499 திட்டம்

STV 499 திட்டம்

இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதில் தினசரி 1 ஜிபி டேட்டாவும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி ஆகும். அதேபோல் காலர் டியூன்களை பொருத்தவரை தினசரி ஒன்றோ அல்லது நிமிடத்திற்கு ஒன்றோ என எத்தனை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

STV 1098 வரம்பற்ற டேட்டா

STV 1098 வரம்பற்ற டேட்டா

STV 1098 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வரம்பற்ற டேட்டாக்கள் அதாவது எத்தனை ஜிபி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எந்த வேகக் கட்டுபாடு விதிகளும் இன்றி. மேலும் இந்த திட்டங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

BSNL வைபை சில்லரை விலை திட்டங்கள்

BSNL வைபை சில்லரை விலை திட்டங்கள்

பிஎஸ்என்எல் வைபை வசதிகளை சில்லரை முறையில் ரீசார்ஜ் செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டமானது ரூ. 9-க்கு 1 ஜிபி என தொடங்கி, ரூ.19-க்கு 3 ஜிபி, ரூ.39-க்கு 7 ஜிபி, ரூ.59-க்கு 15 ஜிபி மற்றும் ரூ.69-க்கு 30 ஜிபி வரை கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL tamilnadu introduce new vasantham plan, daily data plan, unlimited calls plan and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X