தமிழக BSNL 2G, 3G சைட்டுகள் முழுசா 4G ஆக மாறுகிறது.. சற்றுமுன் கிடைத்த தகவல்.. குக் கிராமங்களுக்கும் நேரடி 4ஜி
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இன்று ஒரு சூப்பரான செய்தியை தமிழ்நாட்டு மக்களுக்காக வெளியிட்டுள்ளது. இந்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் (BSNL) 2ஜி (2G) மற்றும் 3ஜி (3G) சைட்டுகள் எல்லாம் இன்னும் எவ்வளவு நாளில் முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை பெரும் என்ற நல்ல செய்தியை பிஎஸ்என்எல் தற்போது தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் குக் கிராமங்களுக்கு 4ஜி சேவை எப்போது துவங்கும்? இதோ விபரம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த மாதம் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண்முடித்தனமாக அதிகரித்தன. இதனால், பல கோடி தனியார் டெலிகாம் வாடிக்கையாளர்கள் அதிருப்திக்கு ஆளாகினர். அதிருப்திக்கு ஆளான பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாற துவங்கினர்.

தமிழ்நாட்டின் அனைத்து BSNL 2G, 3G சைட்டுகள் முழுசா BSNL 4G ஆக மாறுகிறது:
இதன் விளைவாக இப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்குள் மொத்தம் 4.5 லட்சம் புது வாடிக்கையாளர்கள், புதிதாக பிஎஸ்என்எல் சிம் இணைப்பை வாங்கியுள்ளனர். இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து போர்ட் செய்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. BSNL தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெறும் பிஎஸ்என்எல் 2ஜி சேவை மற்றும் பிஎஸ்என்எல் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது.
இருப்பினும் மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் மாறியுள்ளனர். காரணம், பிஎஸ்என்எல் மட்டுமே மலிவு விலையில் இப்போது பிஎஸ்என்எல் திட்டங்களை வழங்கி வருகிறது. மற்றொரு காரணம், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பிஎஸ்என்எல் சைட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், எந்த நகரத்தில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்குமென்ற தகவல் தெரியாமல் இருந்து வந்தது.
ஆனால், இப்போது மக்களுக்கு இருக்கும் சந்தேகம் மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் இன்னும் 2 மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த 2ஜி சைட்டுகள் மற்றும் 3ஜி சைட்டுகள் என்று எல்லாமே முழுமையான 4ஜி சைட்டாக மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி தளங்களிலும் 4ஜி கொண்டுவரப்படும் என்று BSNL தெரிவித்துள்ளது.
சூப்பர் செய்தி சொன்ன BSNL.. தமிழக குக் கிராமங்களுக்கும் நேரடி 4ஜி:
இன்னும் 60 நாட்களுக்குள் தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டம் முழுமையான பிஎஸ்என்எல் 4ஜி வட்டமாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு என்று கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மட்டுமின்றி, தொலைத்தொடர்பு சேவையே இல்லாத சிறிய-சிறிய குக் கிராமங்களுக்கும் நேரடியாக பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும் என்ற அற்புதமான செய்தியை BSNL தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டம் 4ஜி நெட்வொர்க் சேவைக்கு மாற்றப்பட்ட குறுகிய காலத்திற்குள், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன்BSNL 5G சேவையையும் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இப்போதே, இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு மற்றும் பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகளுக்கும் டிமாண்ட் அதிகமாகியுள்ளது. பல நகரங்களில் சிம் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய கூடுதல் சிம் கார்டுகள் ஒவ்வொரு நகரங்களிலும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








