BSNL ஃபேன்சி நம்பர் வாங்க இறுதி வாய்ப்பு.. 20 பிரீமியம் நம்பர் விற்பனை.. ஒரு ஃபேன்சி நம்பர் விலை என்ன?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்திற்குள் பயன்படுத்த கிடைக்கும் புதிய BSNL ஃபேன்சி மொபைல் நம்பர்களை ஏலத்தில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஏலம் பிப்ரவரி 20, 2025 (இன்றுடன்) நிறைவு பெறுகிறது. உங்களுக்கு பிடித்தமான பிஎஸ்என்எல் வானிட்டி நம்பர் (BSNL vanity number) அல்லது பிஎஸ்என்எல் ஃபேன்சி நம்பர் (BSNL fancy number) அல்லது பிஎஸ்என்எல் பிரீமியம் நம்பர்களை (BSNL premium number) வாங்க இதுவே இறுதி வாய்ப்பு என்பதனால், எந்த மாதிரியான எண் என்ன விலையில் வாங்க கிடைக்கிறதென்ற விபரம் இங்கே.
தமிழ்நாடு (BSNL Tamil Nadu circle) மற்றும் சென்னை வட்டத்திற்குள் (BSNL Chennai circle) பயன்படுத்த கிடைக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 20 தனித்துவமான ஃபேன்சி எண்களை (BSNL unique fancy numbers for auction) ஏலத்தில் விற்பனை செய்கிறது. ரூ. 2000 முதல் ரூ. 50,000 வரை பிஎஸ்என்எல் ஃபேன்சி நம்பர்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த 20 பிரீமியம் நம்பர்களை வாங்க நீங்கள் நேரடியாக eauction.bsnl.co.in வலைத்தளத்தை பார்வையிட வேண்டும்.

BSNL ஃபேன்சி நம்பர் வாங்க இறுதி வாய்ப்பு.. இன்றே இறுதி விற்பனை:
ஃபேன்சி எண்களை வாங்க எளிதாக இருப்பதற்காக இந்த பிரத்தியேக தளத்தை BSNL இப்போது பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் நேரடியாக eauction.bsnl.co.in வலைத்தளம் சென்று, Login/Register என்பதை கிளிக் செய்து, உங்களுடைய மொபைல் எண் மற்றும் ஈமெயில் விபரங்களை உள்ளிட்டு, உங்களுக்கான தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டும். பிறகு லாகின் செய்து, உங்களுக்கு பிடித்த பிரீமியம் நம்பரை தேர்வு செய்து பதிவு கட்டணத்தை செலுத்தி ஏலத்தில் பங்குபெறலாம்.
இந்த பதிவு கட்டண தொகை திரும்ப பெறத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக தொகை கொடுத்து ஏலம் எடுப்பவருக்கு அவர் தேர்வு செய்த பேன்சி எண் சொந்தமாகும். ஏலத்தில் வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் அந்த பிரீமியம் எண் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். உங்களுக்கும் ஃபேன்சியான மொபைல் எண் வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 எண்களில் இருந்து உங்களுக்கு பிடித்த எங்களை தேர்வு செய்யுங்கள்.
தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் பயன்படுத்த கிடைக்கும் BSNL ஃபேன்சி எண்கள்:
1. BSNL ஃபேன்சி எண் 9482194822 ஆரம்ப விலை ரூ.2,000
2. BSNL ஃபேன்சி எண் 8762060000 ஆரம்ப விலை ரூ.3,000
3. BSNL ஃபேன்சி எண் 9483993849 ஆரம்ப விலை ரூ.3,000
4. BSNL ஃபேன்சி எண் 8277111999 ஆரம்ப விலை ரூ.4,000
5. BSNL ஃபேன்சி எண் 9481020304 ஆரம்ப விலை ரூ.5,000
6. BSNL ஃபேன்சி எண் 9483070707 ஆரம்ப விலை ரூ.5,000
7. BSNL ஃபேன்சி எண் 9481801008 ஆரம்ப விலை ரூ.5,000
8. BSNL ஃபேன்சி எண் 9483118311 ஆரம்ப விலை ரூ.5,000
9. BSNL ஃபேன்சி எண் 9480301111 ஆரம்ப விலை ரூ.7,000
10. BSNL ஃபேன்சி எண் 8762812345 ஆரம்ப விலை ரூ.7,000
11. BSNL ஃபேன்சி எண் 8277234567 ஆரம்ப விலை ரூ.10,000
12. BSNL ஃபேன்சி எண் 8762762762 ஆரம்ப விலை ரூ.10,000
13. BSNL ஃபேன்சி எண் 8277582775 ஆரம்ப விலை ரூ.10,000
14. BSNL ஃபேன்சி எண் 8277200000 ஆரம்ப விலை ரூ.13,000
15. BSNL ஃபேன்சி எண் 8277155555 ஆரம்ப விலை ரூ.15,000
16. BSNL ஃபேன்சி எண் 8277444444 ஆரம்ப விலை ரூ.20,000
17. BSNL ஃபேன்சி எண் 8277511111 ஆரம்ப விலை ரூ.20,000
18. BSNL ஃபேன்சி எண் 8277111111 ஆரம்ப விலை ரூ.22,000
19. BSNL ஃபேன்சி எண் 8277177777 ஆரம்ப விலை ரூ.25,000
20. BSNL ஃபேன்சி எண் 8277199999 ஆரம்ப விலை ரூ.50,000
இன்றே இறுதி நாள் ஏலம் என்பதனால், BSNL பேன்சி எண்களை வாங்க விரும்புவோர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








