Home
News

சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தற்சமயம் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டி

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டி

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது.

 ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசா

ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசா

இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள இந்ந பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அறிக்கை ஆனது பலருக்கும் குழப்பம் தரும் வகையில் இருக்கும். தெளிவாக இன்னொரு முறை கூறுகிறோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஆனது அதன் இலவச அழைப்பு நன்மையை நிறுத்து கொள்வதாக தெரிவித்தது, பின்பு மற்ற
நெட்வொர்க்குகளுக்கு இடையேயான அழைப்புகளுக்கு ஆறு(6) பைசா என்ற கட்டணத்தில் வசூல் செய்துவருகிறது. ஜியோ
நிறுவனம் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் என்று தெரிவித்தவுடன் மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வரத்தொடங்கிவிட்டன.

பிஎஸ்என்எல் சிம்

இந்நிலையில் சரியான சமயத்தை வைத்து பிஎஸ்என்எல் நிறுவனம் 6பைசா கேஷ்பேக் சலுகையை வழங்கி, பல்வேறு மக்களை ஈரக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் சிம் வாங்க வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம்.

எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைய கிடைக்கும்?

எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைய கிடைக்கும்?

டெலிகாம்டால் தளத்தின் அறிவிப்பு படி, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது அதன் வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இந்த 6பைசா கேஷ்பேக் வாய்ப்பை அறிவித்துள்ளது.

பைசா என்கிற கட்டணம்

குறிப்பாக நீங்கள் பேசும் ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கு ஆறு(6) பைசா என்கிற கட்டணம் ஆனது உங்களுக்கு கேஷ்பேக்காக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

கட்டணமில்லா தொலைபேசி எண்

அதன்பின்பு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஆன்லைன் போர்ட்டலையும் திறந்துள்ளது, இந்த போர்டல் வழியாக பயனர்கள் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்நிறுவனத்தின் லேண்ட்லைன், பாரத் ஃபைபர், பிராட்பேண்ட் இணைப்பிற்கான ஆன்லைன் கோரிக்கையை வைக்க வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும்((18003451500) அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL takes on Reliance Jio with this '6-paise' plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X