Home
News

ஒருவழியாக.. பொங்கி எழுந்த BSNL.. Swadeshi 4G நெட்வொர்க்.. 20,000 BTS.. அம்பானி சார்.. ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு!

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே "கிட்டத்தட்ட" இந்தியா முழுவதும் தங்களது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டன. அவ்வளவு ஏன்? நிதி சிக்கலில் தத்தளிக்கும் வோடாபோன் ஐடியா கூட, அடுத்த 6-7 மாதங்களில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யும் என்று அறிவித்துள்ளது!

ஆனால் அரசங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமோ இன்னமும் 4ஜி நெட்வொர்க்கை கூட "முழுமையாக" அறிமுகம் செய்யவில்லையே? என்கிற கேள்விக்கு சரியான பதில் - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுவதேசி 4ஜி நெட்வொர்க் (Swadeshi 4G network) தான்!

பொங்கி எழுந்த BSNL.. Swadeshi 4G நெட்வொர்க்.. 20,000 BTS!

சுவதேசி 4ஜி நெட்வொர்க் என்றால் என்ன? இந்தியா முழுவதுமாக பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் எப்போது அறிமுகமாகும்? 4ஜி அறிமுகதிற்கு பின்னர், முகேஷ் அம்பானி (Mukesh Ambani ) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் (Sunil Mittal) தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களுக்கு எதிராக பிஎஸ்என்எல் என்ன செய்யவுள்ளது? இதோ விவரங்கள்:

சுவதேசி 4ஜி நெட்வொர்க் என்றால் என்ன? இந்திய அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் அபியானின் (Atmanirbhar Bharat Abhiyan) கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாராகுவதால் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது "சுவதேசி 4ஜி நெட்வொர்க்" என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணமாகவே இது உள்நாட்டில் தயாராகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பொங்கி எழுந்த BSNL.. Swadeshi 4G நெட்வொர்க்.. 20,000 BTS!

நாடு முழுவதும் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமாகும்? பிஎஸ்என்எல் சிஎம்டி பிரவின் குமார் புர்வாரின் (BSNL CMD Pravin Kumar Purwar) கூற்றுப்படி, அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் அல்லது 20,000 பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களை (Base Transceiver Stations - BTS) அடைந்த பிறகு பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகள் (BSNL 4G Service) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

அறியாதோர்களுக்கு பிடிஎஸ் என்பது எந்தவொரு மொபைல் நெட்வொர்க்கிற்குமான ஒரு நிலையான ரேடியோ டிரான்ஸ்ஸீவர் (Fixed radio transceiver in any mobile network) ஆகும், பெரும்பாலும் இது ஒரு டவர் (Tower) வடிவத்தில் தான் இருக்கும். இந்நிறுவனம் ஏற்கனவே வட இந்தியாவில் உள்ள ஐந்து வட்டங்களில் (பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம்) 3000 பிடிஎஸ்-களை நிறுவியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பொங்கி எழுந்த BSNL.. Swadeshi 4G நெட்வொர்க்.. 20,000 BTS!

வட மாநிலங்களுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளிட்ட தென் மாநிலங்களில் 4ஜி சேவையை பெறும் முதல் சில பகுதிகளாக தேர்வு செய்யபட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் பெரும் பகுதிகளானது டவர் நிறுவலுக்காக (Tower installation) வரைபடமாக்கபட்டு உள்ளதாகவும், இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான 4,200 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களும் அடங்கும் என்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறி உள்ளனர்

பிஎஸ்என்எல் 4ஜி சமீபத்தில் எங்கு அறிமுகமானது? பஞ்சாபில் உள்ள லூதியானாவில் (Ludhiana) அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் அம்மாநிலத்தில் மொத்தம் 4 மாவட்டங்களில் பிஎஸ்என்எல்-ன் சுவதேசி 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஃபெரோஸ்பூர் (Ferozepur), பதான்கோட் (Pathankot) மற்றும் அமிர்தசரஸில் (Amritsar) உள்ள 200 டவர்களின் வழியாக பிஎஸ்என்எல் 4ஜி அணுக கிடைக்கிறது.

4ஜி அறிமுகதிற்கு பின்னர் ஜியோ, ஏர்டெல்லுக்கு எதிராக பிஎஸ்என்எல் என்ன செய்யவுள்ளது? லூதியானா மாவட்டத்தின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆன ஏஏ தசீர் (General Manager AA Tazir), "4ஜி அறிமுகத்திற்கு பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் லூதியானாவில் 20 சதவீத சந்தைப் பங்கை (மொபைல் சந்தாதாரர்களை) பெறுவதை பிஎஸ்என்எல் இலக்காக கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Swadeshi 4G Network Launch From 20000 BTS to 20 percent Market Share All You need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X