Home
News

Jio, Airtel தலையில் துண்டை போட்ட BSNL.. சூப்பர் ஸ்டார் பிளான்.. 200Mbps இல் 5000GB டேட்டா, 6 OTT.. என்ன விலை?

இப்போது கும்பலோடு கோயிந்தா போட்டாலும்.. ஒரு காலத்தில் கிங் ஆக இருந்தது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். ஆம் தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஹோம் பிராட்பேண்ட் வணிகங்களில் ஒன்றை கொண்டு உள்ள பிஎஸ்என்எல் ஒரு காலத்தில் பிராட்பேண்ட் துறையில் முதலிடத்தில் இருந்தது.

இப்போது, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களிடமிருந்து தான் இழந்த தனது சந்தை பங்கை மீண்டும் பெற பிஎஸ்என்எல் முயற்சி செய்து வருகிறது. அதனால்தான், பிஎஸ்என்எல் அதன் நுகர்வோருக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் - பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் பிளான் (Super Star Plan).

Jio, Airtel தலையில் துண்டை போட்ட BSNL.. சூப்பர் ஸ்டார் பிளான்!

சுவாரஸ்யமாக இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்கு கிடைக்கிறது. சரி நீங்கள் பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் திட்டத்தின் விலை என்ன? இதை ரீசார்ஜ் செய்யும் போது அல்லது இந்த திட்டத்திற்கான சந்தா கட்டணம் செலுத்தும் போது என்னென்ன நன்மைகளை பெறுவீர்கள் என்பது பற்றி பார்ப்போம்.

பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் திட்டம் ஆனது 200எம்பிபிஎஸ் (Mbbps) என்கிற அதிவேக இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் ஒரு பிராட்பேண்ட் திட்டமாகும். இது நுகர்வோருக்கு மாதத்திற்கு 5000ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே பிரீமியம் ஓடிடி (OTT) நன்மைகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓடிடி நன்மைகளில் ஜீ5, ஹாங்காமா பிளே, ஷீமாரூமீ, எபிக்ஆன், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சோனிலைவ் பிரீமியம் போன்ற தளங்கள் அடங்கும். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தங்களின் பிராட்பேண்ட் திட்டங்களில் (ஃபைபர் திட்டங்கள் மட்டும்) அதிகபட்சமாக 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டாவை வழங்குவதைக் கருத்தில் கொண்டால், 5000ஜிபி டேட்டா என்பது ஒரு பெரிய அளவாகும்.

மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த 5000ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகும், பயனர்கள் 10 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் இணைய அணுகலை பெறுவார்கள். பிஎஸ்என்எல்-ன் சூப்பர் ஸ்டார் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.999 மட்டுமே ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இந்தத் திட்டத்தை பெற நீங்கள் விரும்பினால், நிறுவனத்தின் இணையதளத்திற்கோ அல்லது செல்ஃப் கேர் (Self Care) எனப்படும் மொபைல் ஆப்பிற்கோ நேரடியாக செல்லலாம்.

அங்கிருந்து, நீங்கள் ஒரு புதிய பிராட்பேண்ட் இணைப்பை முன்பதிவு செய்யலாம், அல்லது நீங்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். மாற்றாக, இந்த திட்டத்தைப் பெற அல்லது ஒரு புதிய இணைப்பை பெற, நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவையையும் தொடர்புகொள்ளலாம் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள கிளை அலுவலகத்திற்கும் செல்லலாம்.

சமீபத்தில் ஜியோ அறிமுகம் செய்த ரூ.798 பிராட்பேண்ட் திட்டம்: இது ஒரு வழக்கமான பிராட்பேண்ட் திட்டம் அல்ல, மாறாக ஒரு 'டேட்டா சேஷெட்' (data sachet) அல்லது கூடுதல் டேட்டா பூஸ்டர் (data booster) பேக் ஆகும். அதாவது ஏற்கனவே ஒரு திட்டத்தின் கீழ் உள்ள பயனரின், அவருக்கு கிடைக்கும் எப்யுபி டேட்டா லிமிட் (FUP Data Limit) தீரும் நிலையில் இருந்தால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்தலாம்.

பிஃபா உலகக் கோப்பை 2026-க்கான ஜியோவின் ரூ.798 டேட்டா சேஷெட் திட்டத்தின் நன்மைகள்: உங்களிடம் ஏற்கனவே ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு இருந்தால், இந்த ரூ.798 திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்து கூடுதல் பலன்களை பெறலாம். இத்திட்டத்தில், பயனர்களுக்கு 40ஜிபி டேட்டாவுடன், அந்த டேட்டாவை பயன்படுத்துவதற்கான 40 நாட்கள் செல்லுபடியாகும் காலமும் (validity) கிடைக்கும்.

மேலும், இதில் ஜீ5 (ZEE5) சந்தாவும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் பிஃபா உலக கோப்பை 2026 போட்டிகளை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். இதில் இண்டர்நெட் ஸ்பீட் 100 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இத்திட்டம் தற்போது ஜியோ இணையதளத்தின் 'டேட்டா சேஷெட்' பிரிவில் கிடைக்கிறது.

ஜீ5 சந்தாவை பெற, நீங்கள் மைஜியோ (MyJio) ஆப்பில் உள்ள 'கூப்பன்' (coupon) பகுதிக்கு சென்று, பின்னர் மை வின்னிங்ஸ் (My Winnings) பகுதிக்கு செல்ல வேண்டும். மாற்றாக, ஏற்கனவே ஜீ5 தளத்திற்கான அணுகலை உள்ளடக்கிய ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Super Star Broadband Plan With 5000GB Data 6 Premium OTT At Price Rs 999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X