Home
News

BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!

BSNL பயனர்களுக்கு மிகச் சரியான மற்றும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம் என்றால், அது கட்டாயமாக நாம் இங்கு பார்க்கப்போகும் சூப்பர் BSNL ரீசார்ஜ் திட்டமாக தான் இருக்க முடியும். அப்படி இந்த ரீசார்ஜ் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

இதை ஏன் சிறந்த திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்? உண்மையிலேயே இப்படிப்பட்ட ரீசார்ஜ் திட்டத்தை நாம் ரீசார்ஜ் செய்தால் தான் நமக்கு லாபமா? என்பது போன்ற விஷயங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி

எத்தகைய ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்?

முதலில் எத்தகைய ரீசார்ஜ் திட்டங்களை நாம் ரீசார்ஜ் செய்தால் நமக்கு லாபம் கிடைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பட்ஜெட் காரணமாகவும், மக்களின் சிக்கன குணம் காரணமாகவும், பெரும்பாலானோர் 1 மாத வேலிடிட்டி அல்லது 3 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்கிறார்கள். ஆனால், உண்மையில் இத்தகைய ரீசார்ஜ் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு லாபத்தை வழங்குவதில்லை.

எப்போதும், அதிக வேலிடிட்டி உள்ள திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்வது தான் சிறந்தது. காரணம், இதில் எல்லாமே அடக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, 1 ஆண்டு வேலிடிட்டி உடன் இவை வரும் என்பதனால், அதன் பலன்களை மாதாந்திர கட்டணமாக நாம் பிரித்துப் பார்க்கும் போது, நீங்கள் வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை விட இவை விலை குறைவாகவே இருக்கும். இதைப் புரிந்துகொண்டால், புத்திசாலித்தனமாக ரீசார்ஜ் செய்யலாம்.

BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி

விலையை பார்த்ததும் மலைக்காதீங்க.. மேட்டர் இருக்கு மக்களே.! 395 நாள் சும்மா இல்லை.!

பொதுவாக இது போன்ற நன்மைகளை டெலிகாம் நிறுவனங்கள் மிகவும் நாசூக்கான சில ஆஃப்பர் மூலம் மட்டுமே வழங்கும். அப்படி, BSNL நிறுவனம் சமீபத்தில் வழங்கிய ரீசாஜ் திட்டம் தான் ரூ.2,399 திட்டம். இது 1 வருடத்திற்கும் மேலான வேலிடிட்டி உடன் வருகிறது என்பதே சிறப்பான விஷயமாகும். சரியாகச் சொல்லப் போனால், இது 13 மாத வேலிடிட்டி உடன் வருகிறது.

1 வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த 13 மாதங்களுக்கு ரீசார்ஜ் பற்றிய கவலையே இல்லை. சரியாக இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு 395 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது மொத்தமாக 395 நாட்களுக்கும் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி

மாத கட்டணம் வெறும் ரூ.184 மட்டுமே.! அது எப்படி?

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தினசரி டேட்டாவின் வரம்பு நிறைவடைந்தால், FUP லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இத்துடன் கூடுதல் நன்மையாக ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சந்தா மற்றும் லோக்துன் சந்தா ஆகியவற்றையும் BSNL இலவசமாக வழங்குகிறது.

உண்மையில், 395 நாட்களுக்கு கிடைக்கும் இந்த திட்டம் மிகவும் குறைந்த விலை திட்டம் தான். என்னப்பா சொல்றீங்க? 2399 ரூபாய் கம்மியா உங்களுக்கு? என்று நீங்கள் கடுப்பாகலாம். ஆனால், இதை மாதாந்திர கட்டணமாக நீங்கள் பிரித்து பார்த்தால், நாங்கள் ஏன் இதை கம்மி விலை திட்டம் என்று கூறினோம் என்பது உங்களுக்கே விளங்கிவிடும். இந்த திட்டத்தை மாதாந்திர கட்டணமாகப் பிரித்துப் பார்த்தால், இதன் விலை வெறும் ரூ.184 என்ற செலவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் வெறும் 184 ரூபாய் செலவில் இவ்வளவு நன்மை கிடைப்பது லாபம் தானே.! இதேபோல், உங்களுக்குத் தெரிந்த பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம் எதுவும் இருந்தால், எங்களுக்கு கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். அதையும் ஆராய்ந்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Super Recharge Rs 2399 Plan Comes With 395 Days Daily 2GB Data and Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X