பிஎஸ்என்எல் பயனர்களே தினசரி 5ஜிபி டேட்டா வேண்டுமா? இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் திட்டம்.!

|

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மலிவு விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

 பிஎஸ்என்எல் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் 4ஜி சேவை

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா தரும் ஒரு அருமையான திட்டத்தை வைத்துள்ளது. அந்த திட்டத்தைப் பற்றி இப்போது
பார்ப்போம்.

போச்சு-போச்சு.. Airtel அமேசான் பிரைம் நன்மை நீக்கப்பட்டது.. இனி இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?போச்சு-போச்சு.. Airtel அமேசான் பிரைம் நன்மை நீக்கப்பட்டது.. இனி இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தான் தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும்ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை வரம்பற்றடேட்டாவை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் பெரிய OTT பலன்கள் எதுவும் இல்லை. ஆனாலும்
இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட இதேபோன்ற விலைகளில் வெறும் 2ஜிபிஅல்லது 3ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகின்றன. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைதேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

இந்தியாவிற்கு வர ரெடியாகும் புதிய Realme Narzo 50i Prime.. பட்ஜெட் விலையில் என்ன ஸ்பெஷலா எதிர்பார்க்கலாம்?இந்தியாவிற்கு வர ரெடியாகும் புதிய Realme Narzo 50i Prime.. பட்ஜெட் விலையில் என்ன ஸ்பெஷலா எதிர்பார்க்கலாம்?

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் மற்றொரு முக்கிய நன்மையும் உள்ளது. அதாவது இந்த ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் பிரீமியம் கேம்களுக்கான அணுகலைப் பெறமுடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது Onmobile Global Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் பயனர்களுக்கான இந்தத்திட்டத்துடன் Progressive Web App (PWA) இல் அரினா மொபைல் கேமிங் சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

 பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2,399 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் 425 நட்கள் வேலிடிட்டி பெறமுடியும். பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும்ஈரோஸ் நவ்என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான இலவச சந்தா போன்ற பல சலுகைகள் உள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட்திட்டத்திற்கு கூடுதல் வேலிடிட்டி சலுகை கடந்த ஏப்ரல் 1-ம் தேதிஅறிவிக்கப்பட்டது. இந்த சலுகை இன்னும் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இருக்கும்என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு ரீசார்ஜ் பிரச்சனை இருக்காது.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி,பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும்
இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது.அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும்பெறலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Super Prepaid plan for high data users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X