Home
News

கொடி பறக்குதா.. 4ஜி சேவை.. வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ் சொன்ன BSNL.. தம்பி ஜியோ ஓரம்போ..

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளை தரும் திட்டங்களை வைத்துள்ளது பிஸ்என்எல் நிறுவனம். இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நாடு முழுவதும் உள்நாட்டு 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

குறிப்பாக இது இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு இலக்குகளைக் கணிசமாக மேம்படுத்துகிறது. அதுவும் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி சேவை.. வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ் சொன்ன BSNL..

அதேபோல் அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது என்றே கூறலாம்.

மேலும் 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட புதிய 4ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.

குறிப்பாக அடுத்த ஆண்டு துவகத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிய பின்பு 5ஜி சேவையும் விரைவில் அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசத்தலான மூன்று திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல சலுகைகள் இதில் கிடைக்கும்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

4ஜி சேவை.. வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ் சொன்ன BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின்ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL rs 599 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

தினமும் 100 எஸ்எம்எஸ் , ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL successfully installed more than 50000 4G sites: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X