ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்கும் BSNL:தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 30 நாள் வேலிடிட்டி!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு சலுகைகளை போட்டிப்போட்டு வழங்க தொடங்கியுள்ளன.

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்தது.

BSNL STV 247 திட்டம்

BSNL STV 247 திட்டம்

இந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 247 ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு சலுகையோடு கிடைக்கிறது. அதேபோல் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வசதியும் கிடைக்கிறது.

உஷார்., எச்சரிக்கை தகவல்: தப்பித் தவறி கூட whatsapp-ல இத பண்ணாதீங்க!உஷார்., எச்சரிக்கை தகவல்: தப்பித் தவறி கூட whatsapp-ல இத பண்ணாதீங்க!

முந்தைய திட்டத்தில் இருந்து கூடுதல் சலுகை

முந்தைய திட்டத்தில் இருந்து கூடுதல் சலுகை

தற்போது புதிதாக தொடங்கப்பட்ட திட்டமானது ரூ .186 / ரூ .187 திட்டங்களை போன்றே நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் கூடுதல் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.187 திட்டமானது ஒர நாளுக்கு 3 ஜிபி டேட்டே எனவும் நாள் ஒன்று 250 நிமிட குரல் அழைப்பு என்ற வசதியோடு கிடைத்தது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கினாலும் இந்த திட்டமானது 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா

ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா

இந்த நிலையிலல் ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா தரவும், நாள் ஒன்று 250 நிமிட FUP வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் என்ற சலுகையோடு வெளியாகும் இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.1,999 வருடாந்திர திட்டம் பிஎஸ்என்எல்

ரூ.1,999 வருடாந்திர திட்டம் பிஎஸ்என்எல்

ரூ.1,999 வருடாந்திர திட்டம் புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா போன்ற சேவைகளை வழங்கியது. இந்த திட்டம் 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல், இரண்டாவது விளம்பர சலுகையின் படி 60 நாட்கள் செல்லுபடியை வழங்கி 425 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

இந்த நிலையில் பிஎஸ்என்எல் ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.551-க்கு ரீசார்ஜ் செய்தால் பல்வேறு தினசரி 3 ஜிபி டேட்டா உபயோகிக்கலாம். இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கினாலும். இதில் சிறு குறைபாடு உள்ளது என்றே கூறலாம். அது இந்த திட்டத்தில் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த முடியாது. இணையதள பயன்பாட்டாளர்கள் இது பல நன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த 350 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த 350 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. மொத்தமாக வழங்கப்பட்டுள்ள 350 ஜிபி நிறைவடைந்தவுடன் வரம்பற்ற 64 கேபிபிஎஸ் வேகத்துடன் டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ வரம்பற்ற இலவச குரல் அழைப்பு, அதேபோல் மற்ற தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் விலையானது ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினசரி 3 ஜிபி டேட்டா அறிவித்த வோடபோன்

தினசரி 3 ஜிபி டேட்டா அறிவித்த வோடபோன்

ரூ.249-க்கு அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 3 ஜிபி டேட்டா ஆகியவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ரூ.399-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு தினசரி 3 ஜிபி டேட்டா ஆகியவை வழங்குகிறது.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி

வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி

தங்களது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. யாரும் போர்டல் மாறிவிடாமல் தக்க வைத்துக் கொள்ள இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம் என தொலைத் தொடர்பு வட்டார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
BSNL STV 247 plans offer 3 GB data daily after jio 350Gb data plan, vodafone daily 3 Gb data plan announced

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X