அட்டகாசமான சலுகையை வழங்கும் பிஎன்என்எல் நிறுவனத்தின் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அசத்தலான திட்டங்களை வழங்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை

குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 64 எம்பி கேமரா, ஃபுல் எச்டி வீடியோ பதிவு, சூப்பர்வூக் சார்ஜ்!மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 64 எம்பி கேமரா, ஃபுல் எச்டி வீடியோ பதிவு, சூப்பர்வூக் சார்ஜ்!

 பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் மற்றொரு முக்கிய நன்மையும் உள்ளது. அதாவது இந்த ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் பிரீமியம் கேம்களுக்கான அணுகலைப் பெறமுடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது Onmobile Global Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் பயனர்களுக்கான இந்தத் திட்டத்துடன் Progressive Web App (PWA) இல் அரினா மொபைல் கேமிங் சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2,399 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் 425 நட்கள் வேலிடிட்டி பெறமுடியும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும்ஈரோஸ் நவ்என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான இலவச சந்தா போன்ற பல சலுகைகள் உள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட்திட்டத்திற்கு கூடுதல் வேலிடிட்டி சலுகை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த சலுகை இன்னும் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இருக்கும்என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு ரீசார்ஜ் பிரச்சனைஇருக்காது.

வான்டடாக வந்து சேர்ந்த ரூ.2500 சலுகை.. நேரம் குறைவாகவே இருக்கிறது.. உடனே 'இதை' செய்யுங்கள்..வான்டடாக வந்து சேர்ந்த ரூ.2500 சலுகை.. நேரம் குறைவாகவே இருக்கிறது.. உடனே 'இதை' செய்யுங்கள்..

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி,பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது.அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும்பெறலாம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 என்று அழைக்கப்படும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில்தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்தஅசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL STV 229 plan provides access to premium games: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X