Home
News

அம்பானிக்கு சவால் விடும் BSNL.. சூப்பர் ஸ்பீடில் BSNL 5G ரெடி.. விரைவில் BSNL 4G விலையில் 5G கிடைக்குமா?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்0 பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை இந்தியா முழுக்க பரவலாக விரிவுபடுத்தி வருகிறது. இதற்கிடையே, இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுடன் 5ஜி (5G) வட்டத்திற்குள் பிஎஸ்என்எல் போட்டியிட தயாராகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) பற்றிய கூடுதல் செய்தியை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான, முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ (Jio) நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது வேகமாக வளர்ந்து முன்னேறியுள்ளது. இத்தனை வருடங்களாக கடையில் இடத்தில் சொச்ச எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் காற்று வாங்கிக்கொண்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 3 மாத காலத்திற்குள் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

அம்பானிக்கு சவால் விடும் BSNL.. சூப்பர் ஸ்பீடில் BSNL 5G ரெடி..

அம்பானிக்கு சவால் விடும் BSNL.. சூப்பர் ஸ்பீடில் BSNL 5G ரெடி:

இந்த மாபெரும் வளர்ச்சிக்கு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை (price hikes from private telecom operators) ஏற்றம் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுக்க அதன் 4ஜி சேவையை (BSNL 4G expansion around India) விரிவுபடுத்தியதே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அதையும் தாண்டி, பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பல வட்டங்களில் 4ஜி திட்டங்களை மிகமிக குறைத்த விலையில் வழங்கி மக்களை கவர்ந்து வருகிறது. ஜியோவுடன் போட்டியிடும் வகையில், பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவையை வலுப்படுத்தி வருகிறது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் (2025), பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 5ஜி சேவையை வெளியிடும் நோக்கத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50,000 புதிய BSNL 4G டவர்கள்:

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்துள்ள சமீபத்திய தகவலின்படி, BSNL நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கடந்த செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, சுமார் 50,00-க்கும் மேற்பட்ட 4G டவர்களை நிறுவியுள்ளதாக கூறியுள்ளார். இவற்றில், 41,957 டவர்கள், கடந்த அக்டோபர் 2024 மாதம் முதல் செயல்பட துவங்கியுள்ளன என்று கூறியுள்ளார். பிஎஸ்என்எல் 4ஜி வேலை நடக்கும் இதே நேரத்தில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான வேலையும் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) நெட்வொர்க்கின் பணிகள் விரைவான வேகத்தில் முன்னேறி வருவதாகவும், சோதனைக் கட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் (Prime Minister Narendra Modi) 'ஆத்மநிர்பர் பாரத்' (Aatmanirbhar Bharat) முன்முயற்சியின் கீழ் பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முழுவேகத்தில் ஸ்பீடாக ரெடியாகும் BSNL 5G நெட்வொர்க்:

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநரான பிஎஸ்என்எல், தற்போது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான 4G டவர்களை செயல்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், அவை அனைத்தும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் வேகமான இணைய அணுகலை வழங்க துவங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் வழியாகவே பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் விரைவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அணுகுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாது என்று கூறப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 5ஜி சோதனைக்கு நிறுவனம் ரெடியாக இருப்பதினால், ஒவ்வொரு பகுதியில் டெஸ்டிங் முடிந்தவுடன் பிஎஸ்என்எல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 5ஜி திட்டங்களும் விலை (BSNL 5G price) மலிவானதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை 4ஜி திட்டங்களின் விலையை விட சற்று அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL strengthens 4G network and ready launch BSNL 5G in India soon before 2025 ends
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X