Just In
- 13 min ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- 1 hr ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
Don't Miss
- Lifestyle
எச்சரிக்கை! மறந்தும் இந்த சத்து மாத்திரைகளை ஒன்னா சாப்பிட்ராதீங்க... இல்லன்னா அது ஆபத்தை உண்டாக்கும்...
- Movies
பிரபல பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்.. இசைக் கச்சேரியில் பகீர்!
- News
இப்படித்தான் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறாங்க.. பிபிசி விவகாரம் குறித்து கிரண் ரிஜிஜூ விமர்சனம்
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
2 WFH திட்டங்களில் சலுகைகளை அள்ளி வீசும் பிஎஸ்என்எல்.! வாங்க பார்ப்போம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு WFH டேட்டா திட்டங்களை வழங்கிவருகிறது. அதாவது வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், அதிக டேட்டா விரும்பு பயனர்களுக்கு பிஎஸ்என்எல் வைத்துள்ள Work from Home டேட்டா திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

WFH டேட்டா திட்டங்கள்
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூட கம்மி விலையில் WFH டேட்டா திட்டங்களை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் நாம் எதிர்பார்க்கும் கம்மி விலையில் WFH டேட்டா திட்டங்களை வழங்குகிறது. அதாவது இந்நிறுவனம் ரூ.151 மற்றும் ரூ.251 விலைகளில் WFH திட்டங்களை வைத்துள்ளது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த இரண்டு WFH டேட்டா திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.151 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.151 திட்டம் ஆனது மொத்தமாக 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் Zing சந்தாவை பயனர்கள் பெறமுடியும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.151 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.251 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.251 திட்டமானது 70ஜிபி டேட்டா மற்றும் இலவச ஜிங் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் அதிக நன்மைகளை வழங்கும் சில பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் ஓடிடி-நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. Zing செயலி மற்றும் Eros Nowக்கான சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இதுதவிர தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ 769 திட்டம்
BSNL ரூ 769 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 769 திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்டம்
டேட்டா வேண்டாம் வெறும் அழைப்பு நன்மைகள் மட்டும் போதும் என்று நினைக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ 439 திட்டத்தை தேர்வு செய்யலாம். அதாவது பிஎஸ்என்எல் ரூ 499 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் டேட்டா நன்மைகளை வழங்காது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470