ஒரு விரல் புரட்சி கிடக்குது.. BSNL-ன் ஒரு ரூபாய் புரட்சி.. ரூ.1-க்கு 30 நாள் டெய்லி 2GB டேட்டா பெறுவது எப்படி?
பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited), தனது வாடிக்கையாளர்களுக்காக 'ஒரு ரூபாய்' திட்டத்தை வழங்குகிறது. இந்த சலுகைக்கான விளம்பரம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது, ஆனால் இந்த திட்டம் புதிய பயனர்களுக்கு தொடர்ந்து கிடைக்கிறது
இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சுவாரஸ்யமான சலுகையாகும். அடிப்படையில், இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் விற்பனையையும், புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதையும் அதிகரிப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு சலுகையாகும். அதாவது பிஎஸ்என்எல் நீண்ட காலமாக இந்த திட்டத்துடன் ஒரு புதிய சிம் கார்டையும் வழங்கி வருகிறது.. இது பிஎஸ்என்எல் வழங்கும் எப்ஆர்சி (FRC) என்கிற பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன் (First Recharge Coupon) என்பதை நினைவில் கொள்ளவும்.

அதாவது இது ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையின் கீழ் உள்ள, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. பிஎஸ்என்எல் சேவையின் கீழ் இணையும் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே, அதுவும் முதல் ரீசார்ஜ் ஆக மட்டுமே கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு புதிய சிம் கார்டையும் பெறலாம்.
பிஎஸ்என்எல் ஒரு ரூபாய் திட்டத்தின் நன்மைகள்: இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பனாக இருந்தாலும் கூட, சர்வீஸ் வேலிடிட்டி உடன் வெறும் ஒரு ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும்
இந்த ஒரு ரூபாய் ரீசார்ஜில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் அடங்கும். இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் (அதாவது சர்வேஸ் வேலிடிட்டி) 30 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, புதிய சிம் கார்டை பெற்று, இந்த திட்டத்தை ஒருமுறை ரீசார்ஜ் செய்த பிறகு, மீண்டும் அதே திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும், நீங்கள் ஒரு புதிய சிம் கார்டை பெற்று, வேறு ஒரு பிஎஸ்என்எல் திட்டத்தை தேர்ந்தெடுத்து, முதல் திட்டத்தின் காலம் முடிந்த பிறகு இந்த ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முயன்றால், அதுவும் உங்களுக்கு செயல்படாது. இது முற்றிலும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஒரு விளம்பரச் சலுகையாகும்.
இது அடிப்படையில் பயனர்களை பிஎஸ்என்எல் சிம் கார்டை பெற்று அதன் சேவைகளை சோதித்துப் பார்க்க ஊக்குவிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அரசின் ஒப்புதலுக்கு பிறகு இன்னும் பல இடங்களில் 4ஜி சேவைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இது அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க்கின் பரப்பளவை அதிகரிப்பதோடு, பயனர்களுக்கான நெட்வொர்க் அனுபவத்தையும் மேம்படுத்தும். புதிய சிம் கார்டை பெற, அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தையோ அல்லது நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரையோ அணுகவும்.
விரைவில் வரும் விலை உயர்வு: பிஎஸ்என்எல், விரைவில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலைகளை உயர்த்தும் (prepaid plans tariff hike) என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 2027 நிதியாண்டில் அதன் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்நிறுவனம் 2027 நிதியாண்டில், ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) 50% உயர்த்த விரும்புகிறது. பிஎஸ்என்எல்-இன் தற்போதைய - ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் ரூ.101 ஆகும். இது 2026 நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலை. வருகிற 2027 நிதியாண்டில் இது ரூ.150-ஐ எட்ட வேண்டும் என்று பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications