Home
News

குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்கிய பிஎஸ்என்எல்.!

இதற்குமுன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரக்ஷபந்தன் எனும் பண்டிகையை முன்னிட்டு ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் கால் அழைப்புகளை 74 நாட்களுக்கு வழங்கியது.

By Prakash S

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா நன்மைகளை அறவித்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல்: 2ஜிபி கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.!

பிஎஸ்என்எல் இப்போத அறிவித்துள்ள கூடுதல் டேட்டா சலுகை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இந்த சலுகை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக 2ஜிபி டேட்டா

கூடுதலாக 2ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.186, ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.429, ரூ.447, ரூ.485 மற்றும் ரூ.999 திட்டங்களில் தினசரி 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் பிஎஸ்என்எல் புதிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.399 திட்டம்

ரூ.399 திட்டம்

இதற்குமுன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரக்ஷபந்தன் எனும் பண்டிகையை முன்னிட்டு ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் கால் அழைப்புகளை 74 நாட்களுக்கு வழங்கியது. மேலம் பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் சில பிஎஸ்என்எல் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.27 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.27 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 300எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை பயனர்கள், அதே நெட்வொர்க்கில் நிமிடத்திற்கு 15 பைசாவும், பிற நெட்வொர்க்குகளில் ஒரு நிமிடத்திற்கு 35 பைசாவும் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து 54 நாட்களுக்கு குரல் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படும்.

பிஎஸ்என்எல் ரூ.171-திட்டம்;

பிஎஸ்என்எல் ரூ.171-திட்டம்;

பிஎஸ்என்எல் ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL Starts Offering Additional 2GB Daily Data on Popular Prepaid Plans for a Limited Period: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X