புது லேப்டாப் வாங்குபவர்களுக்கு இலவச பிராட்பேண்ட் இணைப்பு; பிஎஸ்என்எல் அதிரடி.!

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), அதன் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தின் கீழ் ஒரு அட்டகாசமான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியு

|

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), அதன் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தின் கீழ் ஒரு அட்டகாசமான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் புதிய மடிக்கணினி / பிசி வாங்குபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான இலவச 20 Mbps பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் என்றால், லேப்டாப் அல்லது பிசி வாங்கிய ரசீதை காண்பித்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள ரசீதை சமர்ப்பித்தபின், BSNL BBG Combo ULD 45ஜிபி பிராட்பேண்ட் திட்டத்திற்க்கான தகுதியை வாடிக்கையாளர் பெறுவார்.

ஒவ்வொரு நாளும் 20 ஜிபிபிஎஸ் வேகத்துடன் கூடிய 1.5 ஜிபி.!

ஒவ்வொரு நாளும் 20 ஜிபிபிஎஸ் வேகத்துடன் கூடிய 1.5 ஜிபி.!

பிஎஸ்என்எல்-ன் பிபிஜி காம்போ யூஎல்டி 45 ஜிபி பிராட்பேண்ட் திட்டமானது ஒரு ரூ.99/- என்கிற விலையில் அறிமுகமான ஒரு திட்டமாகும். இது ஒவ்வொரு நாளும் 20 ஜிபிபிஎஸ் வேகத்துடன் கூடிய 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை அளிக்கிறது. தினசரி வரம்பு முடிந்த பிறகு, வேகம் 1 Mbps ஆக குறைக்கப்படும்.

பிசி / லேப்டாப் ரசீதை சமர்ப்பிப்பதற்கான விரிவான செயல்முறை.?

பிசி / லேப்டாப் ரசீதை சமர்ப்பிப்பதற்கான விரிவான செயல்முறை.?

புதிய லேப்டாப் அல்லது பிசி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் தான் இலவசமாக அணுக கிடைக்கும். அந்தமான் & நிக்கோபார் டெலிகாம் வட்டம் தவிர, பான்-இந்தியா அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையிலாக பிசி / லேப்டாப் ரசீதை சமர்ப்பிப்பதற்கான விரிவான செயல்முறை பற்றிய விவரங்கள் தெரியவில்லை, கூடிய விரைவில் அதுவும் அறிவிக்கப்படலாம்.

ஜூன் 4 இருந்து அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே.!

ஜூன் 4 இருந்து அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே.!

பிஎஸ்என்எல் இந்த வாய்ப்பை ஒரு விளம்பர திட்டம் அடிப்படையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது அறிமுகம் செய்யபட்ட தேதியில் (ஜூன் 4) இருந்து அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே இது பயனளிக்கும். இந்த இலவச பிராட்பேண்ட் இணைப்பானதுகிடைக்கப்பெற்ற நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி: அதென்ன திட்டம்.?

1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி: அதென்ன திட்டம்.?

முன்னதாக ரஷ்யாவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழாவை இன்னும் சிறப்பிக்கும் வண்ணம், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமானது ஒரு புதிய எஸ்டிவி பிளானை அறிவித்துள்ளதும், அந்த புதிய திட்டமானது ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பிபா உலகக் கோப்பை கொண்டாட்டம் நடக்கும் முழு காலத்திற்கும் செல்லுபடியாகும்.

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

ரூ.149/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த பிபா உலக கோப்பை டேட்டா திட்டமானது தினமும் 4ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 112 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். இதுவொரு பிபா விளம்பர திட்டம் என்பதை மீண்டும் நினைவுறுத்தி விரும்புகிறோம். மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் - இது மும்பை மற்றும் தில்லி வட்டாரத்திற்கு செல்லுபடியாகாது. இந்த இரண்டு வட்டங்களை தவிர்த்து, இதர நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் இந்தத் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

ஒரு பாணியாக உருமாறியுள்ளது..!

ஒரு பாணியாக உருமாறியுள்ளது..!

இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல்-ன் எந்த விதமான குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது. இதுவோரு டேட்டா நன்மையை மட்டும் வழங்கும் ஒரு பிளான் ஆகும். சமீப காலமாக ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது இதுபோன்றே டேட்டா-ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்வது இந்திய டெலிகாம் துறையில் ஒரு பாணியாக உருமாறியுள்ளது.

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

கடந்த ஏப்ரல் மாதத்தில், அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.248/- என்ற ஒரு கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது. இப்போது பிபா கோப்பைக்கான ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. துரதிருஷ்டவசமாக, பிஎஸ்என்எல் தன்னுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. விருப்பமுள்ள ப்ரீபெய்ட் பயனர்கள் பிஎஸ்என்எல் போர்ட்டில் அல்லது பிற ரீசார்ஜ் போர்ட்டல்களில் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் பல தொலைத்தொடர்பு அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Starts Offering 20 Mbps Free Broadband Connection to New Laptop Buyers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X