BSNL கஸ்டமர்கள் காட்டில் மழை.. 12 மாதங்களுக்கு ஆபர்.. மாதம் 3300GB உடன் அன்லிமிடெட் வாய்ஸ்.. எந்த திட்டம்?
இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL), மலிவு விலையில் ஹை ஸ்பீட் கனெக்டிவிட்டி சொல்யூஷனை வழங்குவதன் மூலம் ஹோம் இண்டர்நெட் பயனர்களை கவரும் நோக்கில், தனது "பிஎஸ்என்எல் ஸ்பார்க்" திட்டத்தின் கீழ் மதிப்பு சார்ந்த ஃபைபர் பிராட்பேண்ட் தொகுப்பை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் எப்டிடிஎச் (BSNL FTTH) திட்டமானது அதாவது ஃபைபர்-டு-தி-ஹோம் திட்டமானது, முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.399 என்ற அறிமுக விலை நிர்ணயத்தின் கீழ் அணுக கிடைக்கிறது. இந்த விளம்பர காலம் முடிந்த பிறகு, அதாவது 13-வது மாதத்திலிருந்து, கட்டணம் வழக்கமான மாத கட்டணமான ரூ.449-க்கு மாறும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிபிஓஎன் (GPON) தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பாரத்ஃபைபர் சேவை: பாரத்ஃபைபர் என்பது பிஎஸ்என்எல் -இன் முதன்மை எப்டிடிஎச் சேவையாகும், இது அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்குகிறது. பிஎஸ்என்எல்-இன் கூற்றுப்படி, இந்த எப்டிடிஎச் சேவையானது ஜிபிஓஎன் அடிப்படையிலான ஃபைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது அதிக நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு, ஒரே நேரத்தில் பல பயனர்களுக்கு மிக அதிக பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ஸ்பார்க் எஃப்டிடிஎச் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 50 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ், மாதத்திற்கு 3300ஜிபி அதிவேக டேட்டா பயன்பாடு கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பிற்கான (enhanced digital protection) பிஎஸ்என்எல் செக்யூர் ப்ரோ (BSNL Secure Pro) அணுகலும் அடங்கும்.
பிஎஸ்என்எல், "ஸ்பார்க்" திட்டத்தை, வீடுகளுக்கு தடையற்ற ஸ்ட்ரீமிங், வேகமான பதிவிறக்கங்கள் மற்றும் தடையற்ற ஆன்லைன் இணைப்புக்காக வடிவமைக்கப்பட்ட, மதிப்பு சார்ந்த பிராட்பேண்ட் தீர்வாக நிலைநிறுத்தியுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்ட இலவச சேனல்களுக்கான அணுகலுடன் கூடிய ஐஎப்டிவி (IFTV) ஆதரவையும் இந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் 1800 4444 என்ற எண்ணில் பிஎஸ்என்எல்-இன் வாட்ஸ்அப் சேவை மூலம் இந்த இணைப்பை முன்பதிவு செய்யலாம். போட்டி நிறைந்த பிராட்பேண்ட் பிரிவில், மலிவு விலை மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவைகளில் ஆபரேட்டரின் கவனத்தை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், இந்தச் சலுகை "முழு வேகம், முழு நன்மை" என்ற வாக்குறுதியின் கீழ் சந்தைப்படுத்தப்படுகிறது.
விரைவில் விலை உயர்வு? பிஎஸ்என்எல் விரைவில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலைகளை உயர்த்தும் (prepaid plans tariff hike) என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் , வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்கள் திட்டங்கள் அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தும் சுழற்சிகளை கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்என்எல் அதை செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழியை கொண்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், கட்டணங்களை நேரடியாக உயர்த்தி, அதன் பலன்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, காலப்போக்கில் பல திட்டங்களின் பலன்களை குறைப்பதன் மூலம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துகிறது. இது பொதுவாக, பயனர்கள் தாங்கள் சேவைகளுக்கு அதே தொகையை செலுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள வளங்களோ அல்லது நெட்வொர்க் ஆதரவோ /உள்கட்டமைப்போ பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், இது ஒரு மோசமான உத்தி அல்ல. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 2027 நிதியாண்டில் அதன் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்நிறுவனம் 2027 நிதியாண்டில், ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) 50% உயர்த்த விரும்புகிறது.
பிஎஸ்என்எல்-இன் தற்போதைய - ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் ரூ.101 ஆகும். இது 2026 நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலை. வருகிற 2027 நிதியாண்டில் இது ரூ.150-ஐ எட்ட வேண்டும் என்று பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் ""தலையிலும்" ரூ.49-ஐ அதிகம் ஏற்ற வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டுள்ளது. நேரடி அல்லது மேற்குறிப்பிட்ட மறைமுகமான விலை உயர்வு இல்லாமல் இது சாத்தியம் இல்லை!


Click it and Unblock the Notifications