Home
News

2026 க்கு இறங்கி அடித்த BSNL.. மாதம் ரூ.233 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் 2 வருடாந்திர திட்டங்கள் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில் மாதத்துக்கு ரூ.233 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டமானது கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.233 மட்டுமே செலவாகிறது. ஆனால், இந்த விலைக்கு அதிகப்படியான தினசரி டேட்டா கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரிக்கு எஸ்எம்எஸ் (Daily SMS) கொடுக்கப்பட்டு உள்ளது.

2026 க்கு இறங்கி அடித்த BSNL.. மாதம் ரூ.233 க்கு 365 நாட்கள்!

பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2799 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுத்துள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எம்எஸ்எஸ் சலுகையைும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமே வருடாந்திர திட்டங்களில் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 1,095 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கின்றன. இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ரூ.1,999 விலைக்கு கிடைக்கிறது. இதிலும் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): முந்தைய திட்டத்தை போல 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்துக்கு கிடைக்காது. 330 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

டேட்டா பெரிதாக வேண்டாம், வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் இருந்தால் போதும், அப்படியான வருடாந்திர திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்டம் சரியான தேர்வாக இருக்கும். இதில் தினசரி டேட்டா கிடைக்காது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா கிடைக்கும். போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும்.

ஆகவே, 330 நாட்கள் முழுவதுக்கும் 495 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட குறைவாக இருக்கலாம். ஆனால், விலையும் குறைவாக கிடைக்கிறது. முந்தைய திட்டத்துக்கு மாதத்துக்கு ரூ.233 செலவாக இருக்கிறது. ஆனால், இதில் ரூ.166 மட்டுமே மாதத்துக்கு செலவாகிறது. இந்த திட்டத்திலும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): 300 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதுக்கும் 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Smartest Annual Plan Rs 2799 With 365 Days Validity 3GB Data Local STD Roaming Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X