Home
News

BSNL போட்டான் பாரு.. ரூ.225-க்கு Jio, Airtel கதை க்ளோஸ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, அதனுடைய சில்வர் ஜூபிலி ரூ.225 திட்டத்தில் கொடுத்து இருக்கிறது. தினமும் 2.5 ஜிபி டேட்டாவுடன் முக்கிய சலுகைகளை பேக் செய்துள்ளது. இந்த சில்வர் ஜூபிலி திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் களமிறக்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி ரூ.225 திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இது வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இதே விலைக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இதுபோன்ற சலுகைகள் கிடைக்காது.

BSNL போட்டான் பாரு.. ரூ.225-க்கு Jio, Airtel கதை க்ளோஸ்.. அன்லிமிடெட்!

பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டம் ரூ.225 விவரங்கள் (BSNL Sliver Jubilee Plan Rs 225 Details): இந்த சில்வர் ஜூபிலி திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மற்ற திட்டங்களை போல 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி என்பது இதில் கிடையாது. அதேபோல நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா உள்ளது.

இதை 2.5 ஜிபி டேட்டா முடிந்து பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, தொடர்ந்து டேட்டா சலுகை கிடைக்கும். 30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு அதிகமாக டேட்டாவுக்கு மற்ற நிறுவனங்களில் ரூ.300-க்கும் மேல் விலை நிர்ணயிக்கப்படும். ஆனால், இதில் ரூ.225 விலைக்கு கிடைக்கிறது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த சில்வர் ஜூபிலி திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எப்படி பார்த்தாலும், இந்த திட்டம் அதிக டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாகவே இருக்கிறது.

ஒருவேளை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே போதும், விலையும் ரூ.200-க்குள் இருக்க வேண்டும் என்று கேட்டால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். சில்வர் ஜூபிலி திட்டத்துக்கு முன்பு இந்த திட்டமே அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்தது.

பிஎஸ்என்எல் ரூ.199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): முன்பே சொன்னதை போல இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இது முந்தைய திட்டத்தைவிட குறைவாக இருக்கிறது.

ஆனால், இதற்கு ஏற்ப விலையும் கம்மியாக இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

இதேபோல பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம், கொடுத்து வருகிறது. 4ஜி சேவைகளை தொடங்கி இருப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பும் கிடைக்கிறது. இருப்பினும், 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் வேகம் போதவில்லை என்று கஸ்டமர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Sliver Jubilee Plan Rs 225 Unlimited Voice Calls 2.5 GB Data Per Day Check Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X