Home
News

BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த வசந்தம் கோல்டு திட்டமானது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றது. இந்த திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர்

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர்

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) தமிழ்நாடு வட்டத்தில் செயல்பட்டு வரும் வசந்தம் கோல்ட் பிவி 96 திட்டத்தின் செல்லுபடியைக் குறைத்துள்ளது. வசந்தம் கோல்ட் பி.வி 96 திட்டம் முன்னதாக 90 நாட்கள் செல்லுபடியை வழங்கியது, ஆனால் டெல்கோ திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்களை குறைத்துள்ளது.

30 நாட்கள் குறைத்து 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்

30 நாட்கள் குறைத்து 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்

இந்த திட்டத்தில் 30 நாட்கள் குறைத்து 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சென்னை வட்டத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து பிஎஸ்என்எல் இந்த முடிவை அறிவித்தது. திட்டத்தின் வேறு எந்த விதிமுறைகளும் மாற்றப்படவில்லை என்பதையும் பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.

ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்

ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்

சென்னை மற்றும் தமிழக வட்டங்களில் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் வசந்தம் தங்கம் கிடைப்பதை பிஎஸ்என்எல் நீட்டித்து அறிவித்தது. பிஎஸ்என்எல்-இன் இந்த வசந்தம் கோல்ட் பிளான் திட்டமானது ரூ.96 விலையில் கிடைக்கிறது.

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம்

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம்

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம் 90 நாட்கள் திட்ட செல்லுபடியுடன் கிடைத்தது. பிஎஸ்என்எல் வசந்தம் கோல்டு பிளான் திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் பயனிற்கான 250 வாய்ஸ் கால் அழைப்பு நிமிடங்கள் தினமும் வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்.எம்.எஸ்

தினமும் 100 எஸ்.எம்.எஸ்

இந்த நிமிடங்கள் முடிந்த பின் கட்டணம் வசூலிக்கப்படும். இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த நன்மைகள் 21 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் செல்லுபடியாகும் காலம் 90 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது

90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இத்திட்டத்தின் கிடைக்கும் தன்மை இன்னும் 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. அதாவது இந்த திட்டம் ஜூன் 30, 2020 வரை கிடைக்குமென்ற அறிவிப்பு அதாகும்.

வரம்பற்ற காம்போ திட்டம்

வரம்பற்ற காம்போ திட்டம்

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டும் இந்த வசந்தம் கோல்டு திட்டம் புதிய, இடம்பெயர்வு மற்றும் செல்லுபடியாகும் நீட்டிப்பு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது

இந்த திட்டம் வரம்பற்ற காம்போ திட்டத்துடன் இருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குப் பயனற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎஸ்என்எல் ரூ.96 திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL slashed the validity of the vasanthan gold plan to 60 days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X