சத்தமில்லாமல் இரண்டு தரமான சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.! பயனர்கள் மகிழச்சி.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம்உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 நிறுவனம் தனது

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேண்ட்லைன் பயனர்களுக்கு 6பைசா கேஷ்பேக் சலுகையை மீண்டும் ஒருமுறை நீடித்துள்ளது, அதன்படி இந்த சலுகை வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் வரை கிடைக்கிறது.

ஆறு பைசா கேஷ்பேக்

அதாவது கடந்த வருடம் ஆறு பைசா கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னதாக இந்த வாய்ப்பை ஜூலை 31 வரை நீட்டித்திருந்தது, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் கேஷ்பேக் நன்மையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரைநீட்டித்துள்ளது. இந்நிறுவனம் அதன் தமிழ்நாடு ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக இந்த நீட்டிப்பு சார்ந்த தகவலை அறிவித்துள்ளது.

பதிவுசெய்த

குறிப்பாக இந்த சலுகையின்படி பிஎஸ்என்எல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் லேண்ட்லைன் அழைப்புகளை செய்வதற்கு 6பைசாக்களை கேஷ்பேக்காக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர் "ACT" என்று டைப் செய்து அதன் பின்னர் தகுதிவாய்ந்த தொலைபேசி எண்ணுடன் அதன் எஸ்.டி.டி குறியீட்டையும் உடன் "6PAISA" என்பதை சேர்த்து 09478053334 என்ற எண்ணிற்கு பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால் இந்த சலுகையை பெறமுடியும்.

கவலையே வேணாம்: ஸ்மார்ட்போனில் இது இருந்தால் போதுமே- 5 நிமிடத்தில் 50% சார்ஜ்!கவலையே வேணாம்: ஸ்மார்ட்போனில் இது இருந்தால் போதுமே- 5 நிமிடத்தில் 50% சார்ஜ்!

கிடைக்கும் பணம் சந்தாதாருக்கு கேஷ்பேக் வடிவில்

குறிப்பாக கேஷ்பேக் மூலம் கிடைக்கும் பணம் சந்தாதாருக்கு கேஷ்பேக் வடிவில் வரவு வைக்கப்படுகிறது. பின்பு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் வயர்லைன் பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர்-டு-ஹோம்(எஃப்.டி.டி.எச்) பயனர்களுக்கு இந்த அட்டகாச கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சலுகை

இப்போது அறவித்த இரண்டாவது சலுகை என்னவென்றால், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 பிராட்பேண்ட் திட்டத்தின் கிடைக்கும் தன்மையையும் நீட்டித்துள்ளது. இந்த விளம்பரத் திட்டம் கடந்த ஜூலை 27 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த பிராட்பேண்ட் திட்டம் இப்போது நாடு முழுவதும் அக்டோபர் 27-ம் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைக்கப்படுகிறது

ரூ.600 பிராட்பேண்ட் திட்டம் ஆனது ‘300 ஜிபி சியூல் சிஎஸ்346' என அழைக்கப்படுகிறது, இது 40எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது,மேலும் இது 40எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா வரம்பு தீர்ந்தவுடன், பயனர்கள் 2எம்பிபிஎஸ் என்கிற குறைக்கப்பட்ட வேகத்தின் கீழ் இணையத்தில் உலாவலாம்.

பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.600 பிராட்பேண்ட் திட்டம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி குரல் அழைப்பையும் இந்த மாதாந்திரதிட்டம் வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் அரை ஆண்டு, வருடாந்திர, இரண்டு மற்றும் மூன்று ஆண்டு சந்தாவுக்கும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில்

இதற்குமுன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு புதிய பிரிபெய்ட்திட்டங்களை அறிமுகம் செய்தது, இவை வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு வேண்டி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்களின் விலை ரூ.151 மற்றும் ரூ.251-ஆகும்.

 ரூ.151-திட்டம் ஆனது

அதன்படி பிஎஸ்என்எல் ரூ.151-திட்டம் ஆனது 30நாட்களுக்கு 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.251-திட்டம் ஆனது 70ஜிபி டேட்டா நன்மையை 30நாட்களுக்கு வழங்குகிறது. டாக்டைம் வசதி இல்லாததால் டேட்டா சலுகைகளை வழங்குவதற்காக இந்த பேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Extends 6 Paise Cashback Offer, Rs 600 Broadband Plan And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X