Home
News

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளைக் குறைத்த BSNL..

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.. ஆனால் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளைக் குறைத்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.99 Prepaid Plan) ஆனது ஆரம்பத்தில் 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. அதன்பின்பு 15 நாட்களாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 14 நாட்கள் மட்டுமே இந்த திட்டம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை குறைத்த BSNL..

தற்போது பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Voice Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) நன்மை இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் உள்ளன.

இதுதவிர 50எம்பி டேட்டா வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம். இது லம்ப்-சம் டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை. குறிப்பாக வாய்ஸ் கால்கள் நன்மை மட்டுமே எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.107 Prepaid Plan) ஆனது முன்பு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது நீங்கள் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும் 200 நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வழங்குகிறது இந்த திட்டம். ஒருவேளை அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை குறைத்த BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த திட்டம் அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Silently reduces validity of two affordable prepaid plans: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X