Just In
- 5 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 9 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 9 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 11 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
இரட்டை இலையை முடக்கிடலாம் என எண்ணுகிறார்கள்..பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்க.. ராஜன் செல்லப்பா
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Movies
தனுஷ்50 படத்திற்காக தயாராகும் படக்குழு.. பிரம்மாண்டமாக போடப்படும் ராயபுரம் செட்!
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குஷி அடைந்த பயனர்களை நாசூக்காக ஏமாற்றிய BSNL.! இது தெரியாம ரீசார்ஜ் செஞ்சா கடுப்பாகிடுவீங்க.!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (BSNL) தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சைலெண்டாக விலை உயர்த்தி வருகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிற்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி அசத்தி வந்தது; ஆனால், இப்போது நிறுவனம் நாசூக்காக சில வேலைகளைச் செய்து வருகிறது. அப்படி BSNL என்ன செய்தது? என்பது இங்கே.

சைலெண்டாக BSNL செய்த வேலை.! லிஸ்டில் பல ரீசார்ஜ் திட்டங்கள்.!
சமீபத்தில் வெளியான ஒரு டெலிகாம் (Telecom) அறிக்கையின் படி, BSNL மிகவும் மலிவு விலையில் வழங்கி வந்த ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நிறுவனம் ரூ. 94 திட்டத்தை மறுசீரமைப்பு செய்துள்ளது. BSNL ஆல் மறைமுகமாக சில ரீசார்ஜ் திட்டங்களில் (BSNL Recharge Plans) விலையுயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட லிஸ்டில் பிற திட்டங்களும் இருக்கிறது.!

BSNL ரூ.499 திட்டத்தில் நாசூக்காக என்ன வேலையை செய்தது?
குறிப்பாக, மக்களால் அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட ரூ.499 திட்டத்திலும் நிறுவனம் தனது நாசூக்கான வேலையைச் செய்துள்ளது.
BSNL ரூ.499 திட்டத்தின் (BSNL Rs 499 Plan) விலையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், நிறுவனம் சைலெண்டாக இதில் வழங்கப்பட்டு வந்த வேலிடிட்டியின் காலத்தை முன்பைவிட இப்போது கணிசமாகக் குறைத்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

என்ன மாற்றங்களை BSNL அமல்படுத்தியுள்ளது?
இந்த ரூ.499 பிஎஸ்என்எல் திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மைகள் அப்படியே இருக்கிறது.
இருப்பினும், இதன் வேலிடிட்டியில் இப்போது புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்துடன் இப்போது நிறுவனம் உங்களுக்கு வேறு சில கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
BSNL வழங்கும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL Rs 499 Prepaid Plan) முழுமையான பலன்களைப் பார்க்கலாம் வாங்க.

பிஎஸ்என்எல் ரூ 499 ப்ரீபெய்ட் திட்டம் பழைய மற்றும் புதிய நன்மைகள்
BSNL இன் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது, 80 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
இந்த் திட்டம் உங்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இத்துடன் PRBT, Zing மற்றும் Eros Now நன்மைகளையும் வழங்குகிறது.

கொஞ்சம் உற்று நோக்கி ஆழமாக ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.!
முன்னதாக, இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது முன்னதாக 2ஜிபி தினசரி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கியது.
இந்த திட்டத்தின் நன்மைகளை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால், 90 நாட்கள் வேலிடிட்டியுடன், இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் ரூ. 5.54 செலவில் கிடைத்துள்ளது.

வெளியில் இருந்து பார்க்க அதே 499 ரூபாய் விலை தான்.. ஆனால்.. விலை உயர்வு இருக்கிறது.!
மேலும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் ரூ. 2.77 என்ற கட்டணத்தில் கிடைத்துள்ளது.
ஆனால் வேலிடிட்டி குறைக்கப்பட்ட பிறகு, இந்த திட்டத்தின் தினசரி செலவு ரூ.5.54 இல் இருந்து ரூ. 6.23 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் ரூ.2.77 என்று கட்டணத்தில் இருந்து இப்போது ரூ.3.31 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ரூ.499 திட்டத்தின் விலையில் எந்த மாற்றமும் வெளியில் தெரியவில்லை.

இந்த மறைமுகமான உண்மை தெரிந்தால் கடுப்பாவீர்கள்.!
ஆனால், உற்று நோக்கிக் கவனித்தால், முன்பை விட இந்த திட்டம் இப்போது ஒரு சிறிய அதிகரிப்புடன் பயனர்களுக்குக் கிடைக்கிறது என்பதே மறைமுகமான உண்மையாக இருக்கிறது.
இதுவரை இந்த ரூ. 499 திட்டத்தை ரீசார்ஜ் செய்து வந்த 4G ஐப் பெற முடியாத தொலைத்தொடர்பு பயனர்களை இது நிச்சயமாக எரிச்சலடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

4ஜி-யே இல்லாமல் விலை ஏற்றம் நியாயமா?
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு இன்னும் சில கூடுதல் ரூபாய்களில் சிறந்த 4ஜி சேவைகளை வழங்கும்போது, BSNL 4ஜியை அறிமுகப்படுத்தாமல் அதன் சேவைகளின் விலையை அதிகரித்திருப்பது நியாயப்படுத்த முடியாத செயலாக இருக்கிறது.
இப்போதைக்கு, BSNL வாடிக்கையாளர்களுக்கு 4G நெட்வொர்க் (BSNL 4G) சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான பாதையில் நிறுவனம் செயல்படுவதாகத் தெரிகிறது.

இந்தியாவில் BSNL 4G மற்றும் 5G எப்போது கிடைக்கும்?
BSNL பயனர்களுக்கு ஜனவரி மாத தொடக்கத்தில் 4ஜி கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், பிஎஸ்என்எல்-ல் இருந்து 4ஜி அறிமுகப்படுத்தப்பட்ட 6 முதல் 7 மாத கால இடைவெளியில் நிறுவனம் இந்தியாவில் அதன் 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470