Home
News

அடிதூள்.. ரூ.151 போதும்.. 30 நாள் வேலிடிட்டி.. சத்தமின்றி கூடுதல் சலுகையை வழங்கிய BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது வரும் டிசம்பர் 2025-ம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 151 Plan) தான் கூடுதல் நன்மையை வழங்கி உள்ளது. அதாவது இந்த ரூ.151 ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு பிஎஸ்என்எல் ரு.151 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 40ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அடிதூள்.. ரூ.151 போதும்.. சத்தமின்றி கூடுதல் சலுகையை வழங்கிய BSNL..

குறிப்பாக பிஎஸ்என்எல் ரு.151 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா வவுச்சர் என்பதால் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் இல்லை. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அசத்தலான நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் வைத்துள்ளது. இப்போது அந்த பரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ரூ.228 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. Arena மொபைல் கேமிங் சேவை வழங்குகிறது இந்த திட்டம். பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிதூள்.. ரூ.151 போதும்.. சத்தமின்றி கூடுதல் சலுகையை வழங்கிய BSNL..

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை இதில் உள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL silently increasing the validity of Rs 151 plan: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X