BSNL சைலண்டா செய்த சம்பவம்: டுவிஸ்ட் உடன் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!

|

இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை சமாளிக்க அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையுடன் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும் 5ஜி சேவை அறிமுகம் செய்ய தயாராகி வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் தான் பிஎஸ்என்எல் திட்டங்களின் விலையை மறைமுகமாக உயர்த்தி இருக்கிறது.

மறைமுகமாக உயர்த்தப்பட்ட விலை

மறைமுகமாக உயர்த்தப்பட்ட விலை

பிஎஸ்என்எல் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மறைமுகமாக உயர்த்தி இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் இதை புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கிறது. இந்த இடத்தில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதிலாக பிஎஸ்என்எல் திட்டங்களின் திட்டங்களின் பலன்களை குறைத்திருக்கிறது. கட்டணத்தின் விலையை உயர்த்துவதற்கு பதிலாக பிஎஸ்என்எல் அதே விலையில் திட்டத்தின் பலன்களை குறைத்திருக்கிறது. திட்டத்தின் விலை மற்றும் குறைக்கப்பட்ட நன்மைகளின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

BSNL ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளை வழங்கி வந்தது. தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டியானது 18 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 18 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு ரூ.4.50 இல் இருந்து ரூ.5.50 ஆக உயர்ந்து இருக்கிறது.

BSNL ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.118 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச PRBT (Personalised Ring Back Tone) சேவையை வழங்கியது. கூடுதலாக இந்த திட்டத்தில் தினசரி 0.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நன்மைகள் குறித்து பார்க்கையில், அதே வரம்பற்ற குரல் அழைப்பு, இலவச PRBT (Personalised Ring Back Tone) மற்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஒரு நாள் செலவு ரூ.4.53 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.5.9 ஆக இருக்கிறது.

BSNL ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது 75 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 65 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தினசரி ரூ.4.25 செலவான நிலையில் தற்போது ரூ.4.90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

3 புதிய திட்டங்கள் அறிமுகம்

3 புதிய திட்டங்கள் அறிமுகம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சத்தம் இல்லாமல் 3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டங்களானது 18 நாட்கள், 20 நாட்கள் மற்றும் 65 நாட்கள் செல்லுபடியுடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.99, ரூ.118 மற்றும் ரூ.319 விலையில் இருக்கிறது. புதிய திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளை விரிவாக பார்க்கலாம்.

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்களுக்கு செல்லுபடியாகும். இலவச PRBT நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டாலும் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

BSNL ரூ.118 ரீசார்ஜ் திட்டம்

BSNL ரூ.118 ரீசார்ஜ் திட்டம்

அதேபோல் BSNL ரூ.118 திட்டமானது 20 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இணைய வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. BSNL ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் 10 ஜிபி லம்ப்சம் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 65 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Silently Increase its Tariffs Price, Recharge Plan Benefit Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X