2 ரூபாயில் தாராளம் காண்பித்த BSNL.. 160 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ், டேட்டா, SMS எல்லாமே இருக்கு.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் 2 ரூபாய்க்குள் பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியும் என்பதை இப்போது நிரூபித்துள்ளது. ஆம், வெறும் இரண்டே ரூபாய் வித்தியாசத்தில், இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை இப்போது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரீசார்ஜ் செய்ய துவங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் விலை என்ன? அப்படி இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
கடந்த ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் அவற்றின் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பைட் ரீசார்ஜ் திட்டங்களின் (Postpaid recharge plans) விலையை 15% முதல் 25% வரை சகட்டுமேனியாக உயர்த்தின. ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தாத ஒரே நிறுவனமாக BSNL மட்டுமே திகழ்கிறது.

2 ரூபாயில் தாராளம் காண்பித்த BSNL.. 200 நாள் வேலிடிட்டி ஒன்னு.. 160 நாள் வேலிடிட்டி ஒன்னு:
இதனால், மக்கள் இப்போது கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கிவிட்டனர். தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த பிஎஸ்என்எல் நிறுவனம், பல கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக ரூ. 997 திட்டம் மற்றும் ரூ. 999 திட்டம் என்ற இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan) மற்றும் பிஎஸ்என்எல் ரூ, 999 திட்டம் (BSNL Rs 999 Plan) ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையே வெறும் 2 ரூபாய் மட்டுமே வித்தியாசம் என்றாலும், இரண்டு திட்டங்களுக்கும் இடையில் மாபெரும் வேறுபாடு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சரி, இப்போது இந்த இரண்டு திட்டங்களும், எப்படி வெறும் 2 ரூபாய் வித்தியாசத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 999 திட்டம் (BSNL Rs 999 Plan):
இந்த திட்டம் 200 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது மக்களே. இந்த திட்டம் உங்களுக்கு அணைத்து நெட்வொர்க்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அதிக வாய்ஸ் கால் செய்யும் பயனர்கள் மற்றும் வீட்டில் வைஃபை இணைப்பு, அல்லது டேட்டா இணைப்பு கைவசம் இருக்கும் நபர்களுக்கு ஏற்றது. காரணம் இதில் டேட்டா மற்றும் SMS நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan):
இந்த திட்டம் 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 2GB டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவசங்களாக, பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon &Astrotell),
கேமியம் (Gameium), லிஸ்டன்பாட்காஸ்ட் (Lystnpodcast), ஸிங்க் (Zing), வாவ் என்டர்டைன்மெண்ட் (wow Entertainment) போன்ற இலவச நன்மைகள் 160 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. வெறும் 2 ரூபாய் வித்தியாசத்தில் விலை மலிவை காண்பித்து, நன்மைகளை வாரி வழங்கி, BSNL நிறுவனம் இப்போது மக்களை ஈர்க்க துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 5 மாதம் வரை வேலிடிட்டி கிடைப்பதனால், இதற்கு மவுசு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications