ஒவ்வொரு கிராமப் பரிமாற்றத்திலும் ஒரு வைஃபை அக்செஸ் பாயிண்ட் : பிஎஸ்என்எல்.!

|

அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் மொத்தம் 25 ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க, அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) யுனிவர்சல் சர்வீஸ் ஒபிலிகேஷன் ஃபண்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஒவ்வொரு கிராமப் பரிமாற்றத்திலும் ஒரு வைஃபை அக்செஸ் பாயிண்ட்.!

தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்காவின் முன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டது. யூஎஸ்ஓ நிதியில் இருந்து இந்த 25,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளுக்கான நிதி கிடைக்கும என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு முழு மூலதனச் செலவு மற்றும் செயல்பாட்டு செலவினங்களை ரூ.940 கோடி என்று அரசு வழங்கியுள்ளது.

"முதல் வருடத்தின் 100 சதவிகித மூலதனச் செலவு மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் ஆதரவை முதல் வருடம் யுனிவர்சல் சர்வீஸ் ஒபிலிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் வழங்கப்படும், அதன்பிறகு இரண்டாவது ஆண்டில் 75 சதவிகிதம், அதுவே மூன்றாவது ஆண்டு 50 சதவிகிதம் என்ற அளவிலான ஆதரவு வழங்கப்படும்" என்று வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கிராமப் பரிமாற்றத்திலும் ஒரு வைஃபை அக்செஸ் பாயிண்ட்.!

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமப் பரிமாற்றத்திலும் ஒரு வைஃபை அக்செஸ் பாயிண்ட் அமைக்கப்பட வேண்டும். இந்த வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளால் கிடைக்கும் நம்பகமான இணைய சேவையானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வலுவான ஃபைபர் உறுதி செய்யப்படும் மற்றும் ஜிகாபிட் செயலி ஆப்டிகல் நெட்வொர்க் இணைப்பு பார்ட்நெட் திட்டத்தின் மூலம் நீட்டிக்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL to set up 25000 Wi-Fi hotspots at Rural Exchanges. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X