Home
News

இலவச டேட்டா சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்த வண்ணvம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் 20ஆண்டுகளை கொண்டாடும் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் பயனர்களுக்கு 25சதவிகிதம் கூடுதல் டேட்டாவை வழங்க உள்ளது.

டெலிகாம் டாக் வலைதளத்தின்

டெலிகாம் டாக் வலைதளத்தின் தகவலின்படி இந்த அக்டோபர் மாதத்தை வாடிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான மாதமாககொண்டாட பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான மாதம் திட்டத்தின்ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அனுபவத்தை வழங்க பல முயற்சிகளைத்
திட்டமிட்டுள்ளது.

ல் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் மேம்பட்ட வேகம் மற்றும் டேட்டா வரம்புகளுடன் புதிய பாரத் ஃபைபர் திட்டங்களை அறிமுகம் செய்தது. பின்பு இந்த புதிய திட்டங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கானமகிழ்ச்சியான மாதம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பைபர் திட்டங்களான ஃபைபர்

புதிய பாரத் ஃபைபர் திட்டங்களான ஃபைபர் பேசிக், ஃபைபர் வேல்யூ, ஃபைபர் பிரீமியம் மற்றும் ஃபைபர் அல்ட்ரா போன்றவை முன்னெப்போதையும் விட மேம்படுத்தப்பட்ட் சலுகைகளை வழங்கும் நேரத்தில் பிஸ்என்எல் நிறுவனத்தின் 30நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் அனைத்து ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களிலும் (எஸ்.டி.வி) 25% வரை கூடுதல் டேட்டா கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட முன்முயற்சிகளில் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் அக்டோபரில் திட்டமிடப்பட்ட முன்முயற்சிகளில் பிஎஸ்என்எல் இன் லேண்ட்லைன்ஸ் மற்றும் பிராட்பேண்டின் தரத்தில் கவனம் செலுத்துதலும் அடங்கும். குறிப்பாக இனிமேல் எல்லா நாட்களிலும் 90% தவறுகளை "24 மணி நேரத்திற்குள்" சரிசெய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன் ஃபைபர் பிழைகள் 24 மணி நேரத்திற்குள்
அட்டென்ட் செய்யப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களின் நன்மைகளை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு ஃபைபர் பேசிக் திட்டம் என்று கூறப்படுகிறது, இது பயனருக்கு30 Mbps வேகத்தின் கீழ் 3.3 TB (3300GB) அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் குருP குறிப்பிட்ட வரம்பிற்கு பிறகு, இணையவேகம் 2mbps ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டம் தவிரஅனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு இந்தியாவில்உள்ள எந்தவொருநெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 100Mbps வேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் டேட்டாவின் வரம்பு முடிந்ததும், வேகம் 2 Mbps ஆக குறைகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் இலவச லேண்ட்லைன் அழைப்பு நன்மையையும் பெறுவார்கள். குறிப்பாக மேலே நாம் பார்த்த பேசிக் திட்டம், இந்த வேல்யூ திட்டம் உட்பட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்த திட்டங்களுமே நீங்க கால செல்லுபடிகளை வழங்கவில்லை. மாறாக ஒவ்வொரு திட்டத்திற்கும் குறைந்தபட்ச வாடகை காலம் ஒரு மாதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். இதில் பயனர்கள் 200Mbpsவேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டாவை பெறுகிறார்கள். குறிப்பாக டேட்டா வரம்பு முடிந்ததும்,இதன் வேகம் 2 Mbps ஆக குறைகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 300 Mbps வேகத்துடன் 4TB (4000GB) டேட்டாவை வழங்குகிறது. இருந்த போதிலும் சில நகரங்களில் அதிகபட்ச வேகம் 200Mbps-உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம்4Mbps ஆக குறைகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலகினால் அவர்களுக்கான ஒடிடி சந்தாவும் ரத்து செய்யப்படும். மாறாக அவர் நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் 300 மற்றும் சூப்பர்ஸ்டார் 500 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடம்பெயர விரும்பினால் இது நடக்காது.

Best Mobiles in India

English summary
BSNL Set to Offer Up to 25% Additional Data to its Users in October And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X