Home
News

மக்கள் கவனத்தை ஈர்த்த புதிய BSNL Selfcare ஆப்ஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது?

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்காக 'BSNL Selfcare' பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. கூகுள் ப்ளே ஸ்டோரில், இந்த ஆப்ஸின் மொத்தப் பதிவிறக்கங்கள் 500k அல்லது 5,00,000 முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், இது மட்டுமல்லாமல், பயன்பாடு 5 நட்சத்திரங்களில் 4.3 நட்சத்திரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திடாத ஒன்று. பிஎஸ்என்எல்லின் முந்தைய மொபைல் அப்ளிகேஷனுக்கு இது போன்ற வரவேற்பு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை.

மக்களை கவர்ந்த புதிய BSNL பயன்பாட்டின் பயனர் இடைமுகம்

மக்களை கவர்ந்த புதிய BSNL பயன்பாட்டின் பயனர் இடைமுகம்

கடந்த பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட செயலியைப் போல் இது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய BSNL பயன்பாட்டின் பயனர் இடைமுகம் (UI) வோடபோன் ஐடியாவின் மொபைல் பயன்பாட்டைப் போலவே இருப்பதாகப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இது உண்மையில் நல்லது என்பது இப்போது கிடைத்துள்ள வரவேற்பின் முடிவை பார்க்கையில் உறுதியாகியுள்ளது. BSNL, மொபைல் பயன்பாட்டின் மூலம் ஆன்லைனில் அதன் திட்டங்களை வாங்கும் முறையை மாற்றியமைத்துள்ளது மற்றும் அவர்களின் மீதமுள்ள இருப்பு மற்றும் தரவை சரிபார்க்கிறது.

BSNL Selfcare App பற்றிய அம்சங்கள்

BSNL Selfcare App பற்றிய அம்சங்கள்

BSNL Selfcare App அம்சங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், BSNL Selfcare பயன்பாட்டின் ஒரே நோக்கம் பயனர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கவும் சேவைகளின் பயன்பாட்டைக் கண்காணிக்க உதவுவதாகும். நிறுவனம் வழங்கும் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் பயன்பாட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் சில பேக்குகளை ஆப்ஸ் பரிந்துரைக்கிறது. நீங்கள் தேடும் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்தையும் பயன்பாட்டிற்குள் காணலாம்.

இனி திட்டங்களின் விபரங்கள் மற்றும் நன்மைகள் தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்படும்

இனி திட்டங்களின் விபரங்கள் மற்றும் நன்மைகள் தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்படும்

BSNL திட்டங்கள் வழங்கப்படும் தரவுகளின் அளவு, செல்லுபடியாகும் தன்மை மற்றும் பிற நன்மைகள் உட்பட ஒவ்வொரு விவரங்களையும் இந்த புதிய மொபைல் ஆப்ஸ் முற்றிலுமாக அதன் பயனர்களுக்குக் காண்பிக்கிறது. ஆனால், இந்த செயலியின் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் பல பிஎஸ்என்எல் எண்களைச் சேர்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம். உங்கள் வீட்டில் வயதான பெற்றோர்கள் இருந்தால், அவர்களால் சொந்தமாக ரீசார்ஜ் செய்ய முடியாததால், அவர்களுடன் தொடர்பை இழப்பது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.

பல கணக்குகளுக்கு ஒரே இடத்தில் ரீசார்ஜ்

பல கணக்குகளுக்கு ஒரே இடத்தில் ரீசார்ஜ்

காரணம், இப்போது BSNL தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ள Selfcare ஆப் மூலம் பல கணக்குகளுக்கு நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது உங்கள் பிடித்தமானவர்களின் ரீசார்ஜ் காலாவதியை நினைவுபடுத்துகிறது. புதிய BSNL ஆப்ஸ் இன் UI மிகவும் சுத்தமாகவும் எளிமையாகவும் உள்ளது. இது பயனர்கள் நேரத்தைச் சேமிக்க அனுமதிக்கிறது மற்றும் பயன்பாட்டிற்குள் அனைத்தையும் புரிந்துகொள்ள எளிமையானதாக மாறியுள்ளது.

மக்களின் தேவையை எளிமையாகிய புதிய UI

மக்களின் தேவையை எளிமையாகிய புதிய UI

இது BSNL இன் பயனர்களுக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய விஷயமாகும். மேலும் இந்த செயலிக்கு இப்போது கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும் போது இதன் UI உண்மையில் மக்களின் தேவையை எளிமையாகியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த புதிய ஆப்ஸ் பெற்ற மதிப்பீடுகளைப் பார்க்கும்போது, ​​BSNL Selfcare ஒரு வெற்றிகரமான பயன்பாடு என்று சொல்வது வசதியாக உள்ளது. நீங்களும் ஒரு BSNL பயனர் என்றால், கட்டாயம் இந்த புதிய ஆப்ஸை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Selfcare App Features You Should Know About : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X