Home
News

BSNL-ன் 2வது நியூ இயர் ஆபர்.. கேபிள் TV, DTH-க்கு டாட்டா.. 450 சேனல், 100GB டேட்டா, OTT.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, 2026 தொடங்கியதுமே, நாடு முழுவதுமாக அதன் வோவைஃபை (VoWiFi) சேவையை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய வேகத்தில், இன்னொரு புத்தாண்டு சர்ப்ரைஸ் ஆக அதன் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

அது பிஎஸ்என்எல்-ன் ரூ.251 பிளான் ஆகும். எக்ஸ் தளம் வழியிலாக பிஎஸ்என்எல் இந்தியா பதிவிட்டுள்ள சமீபத்திய போஸ்ட் ஆனது - ரூ.251 திட்டத்துடன் அதிகமாக கொண்டாடுங்கள், அதிகமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள் மற்றும் அதிகமாக இணைந்து இருங்கள் என்று கூறி, இந்த ஆபர் ஜனவரி 31, 2026 வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

BSNL.. கேபிள் TV, DTH-க்கு டாட்டா.. 450 சேனல், 100GB டேட்டா, OTT!

நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டமானது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 100 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்

சுவாரசியமாக ரூ.251 திட்டத்தின் கீழ் பிஐடிவி (BiTV) இலவச சந்தாவும் கிடைக்கும். அறியாதோர்களுக்கு பிஐடிவி என்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இன்டர்நெட் டிவி சேவை (internet TV service) ஆகும்.

இதன்கீழ் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் மற்றும் ஃபேன்கோட் போன்ற பல்வேறு ஓடிடி தளங்கள் அனைத்தும் ஒரே ஆப்பின் கீழ் அணுக கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இது ஸ்மார்ட்போன்களின் வழியாகவே நேரடியாக ஆல்-இன்-ஒன் பொழுதுபோக்கு சொல்யூஷனை வழங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களுக்குமான வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை அறிமுகப்படுத்தி இருந்தது. வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை தொழில்நுட்பம் ஆனது டெலிகாம் சந்தாதாரர்கள் வைஃபை மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கிறது.

இது சவாலான சூழல்களில் (அதாவது நெட்வொர்க் சரியாக கிடைக்காத அல்லது இல்லாத பகுதிகளில் அல்லது நேரங்களில்) மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது. வைஃபை காலிங் என்றும் அழைக்கப்படும் வோவைஃபை சேவையானது, இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

வோவைஃபை சேவையின் இந்த நாடு தழுவிய வெளியீடு ஆனது பிஎஸ்என்எல்-ன் நெட்வொர்க் நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. குறிப்பாக மொபைல் கவரேஜ் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், இந்த வோவைஃபை சேவையானது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள் மற்றும் தொலைதூர இடங்கள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள பகுதிகளிலும் கூட வோவைஃபை சேவையானது கனெக்ட்விட்டியை மேம்படுத்துகிறது.

பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி, எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்களின் தேவையும் இல்லாமல், சந்தாதாரரின் தற்போதைய மொபைல் நம்பர் மற்றும் டயலர் ஆப் மூலம் வோவைஃபை அழைப்புகள் செய்யப்படுகின்றன. இது நெட்வொர்க் நெரிசலை குறைக்கவும் உதவுகிறது என்றும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் பிஎஸ்என்எல் கூறுகிறது.

இந்த தொழில்நுட்பம் வாய்ஸ் கால்கள் மற்றும் மெசேஜ்களை மேற்கொள்ளவும் பெறவும் பிஎஸ்என்எல்-ன் பாரத் ஃபைபர் மற்றும் பிற பிராட்பேண்ட் சேவைகள் போன்ற பிக்ஸடு வைஃபை இணைப்பை பயன்படுத்துகிறது. இது மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் வைஃபை-க்கு இடையே பரிமாற்றங்களை ஆதரிக்கும் ஐஎம்எஸ் (IMS) அடிப்படையிலான சேவையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Second New Year Offer Rs 251 Plan with 100GB Data Free BiTV Extended to January 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X