Jio, Airtel-ஐ முடித்த BSNL.. சிக்னல் இல்லாமல் வாய்ஸ் கால்கள்.. வந்தது ரூ.1.34 லட்சத்துல புது சாட்டிலைட் போன்!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களே கொடுக்க முடியாதபடி சிக்னல் இல்லாமலேயே பயன்படுத்தக்கூடிய பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் (BSNL Satellite Phone) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன் கிடைக்கும் விலையில் சாட்டிலைட் வழியாக வாய்ஸ் கால்களை (Satellite Voice calls) கொடுக்கிறது.
இந்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனமானது, டெலிகாம் மார்கெட்டில் மலிவு விலைக்கு சேவைகளை கொடுப்பது மட்டுமல்லாமல், நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளிலும் தகவல் தொடர்பை உறுதி செய்வதற்கு சாட்டிலைட் போன்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது, புதிய பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது.

எல்லைகளைத் தாண்டிய தகவல் தொடர்பு (Communication Beyond Boundaries) என்ற கருப்பொருளின் கீழ் செல்போன் டவர்கள் இல்லாத அல்லது செயல்படாத இடங்களில் தகவல் தொடர்பை உறுதிப்படுத்த இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் களமிறக்கப்பட்டுள்ளது. சாட்டிலைட் கனெக்டிவிட்டி (Satellite Connectivity) கொடுக்கிறது.
ஆகவே, இன்மார்சாட் (Inmarsat) போன்ற குளோபல் சாட்டிலைட் நிறுவனங்களுடன் இணைத்து வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எமர்ஜென்சி சப்போர்ட் (Emergency Support) கொடுக்கிறது. வழக்கமாக போன்களை போலல்லாமல், அதிக பேக்கப் மற்றும் டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடுமையான சூழல்களிலும் தாக்குப்பிடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹீட் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவையும் இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனுக்கு கிடைக்கிறது. எலக்ட்ரிசிட்டி இல்லாத பகுதிகளிலும் அதிக நேரம் பயன்படுத்தும்படி பேட்டரி பேக்கப் கொடுக்கப்பட்டு உள்ளது.
கிளியர் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. மேலும், எஸ்ஓஎஸ் எமர்ஜென்சி சப்போர்ட் (SOS emergency support) கொண்ட மாடலாக இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் இருக்கிறது. இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனை அனைவரும் வாங்கிவிட முடியாது. பாதுகாப்பு துறை கடல்சார் துறை, பேரிடர் மீட்பு குழுக்கள், சுரங்கத் தொழில் உள்ளிட்டவைக்கு கிடைக்கிறது.
மேலும், ரிமோட் ஆப்ரேஷன்கள் (Remote Operations), மலையேற்றம், காடுகளுக்கு இடையே பயணம் உள்ளிட்டவைக்கும் இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனை வாங்கி கொள்ளலாம். குறிப்பாக கடலில் அதிக தூரம் செல்லும் மீனவர்களுக்கும் இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆகவே, வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும்.
இந்திய மீனவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும் இதை பயன்படுத்த முடியும். பேரிடர் காலங்களில் செல்போன் டவர்கள் வேலை செய்யாத நேரத்தில் தேவையான உதவியை பெறுவதற்கும் இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் சரியாக இருக்கும். அனைத்து வரிகளும் உள்பட ரூ.1,34,166 விலைக்கு இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் கிடைக்க இருக்கிறது.
இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனை ஆன்லைன் வாங்க முடியாது. பிஎஸ்என்எல் அலுவலகங்களை தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம். +91 9465101323 என்னும் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டும் வாங்கி கொள்ளலாம். இந்த மொபைல் நம்பர் பிரத்யேகமாக பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனுக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஐபோனை வாங்கும் விலைக்கு இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன் கிடைக்கிறது. ஆகவே, இதை வாங்கவும் பலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால், சாட்டிலைட் வழியாக தொடர்பு கொள்ளவதற்கு சரியான சூழல் மற்றும் தேவை இருந்தால் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம், இந்த சாட்டிலைட் போனை கொடுக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications